About Koel Thoppu

குயில் தோப்பு, குன்றக்குடி

குன்றக்குடி தமிழ்நாட்டின் மிகவும் பழமையான கிராமங்களில் ஒன்று. தமிழ்நாடு, சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள இந்த சிறு கிராமத்தில் மூன்று விஷயங்கள் சிறப்புக்குரியவை.
1. தமிழ்கடவுள் முருகன், சண்முகநாதனாக காட்சிதரும், மலைமீது அமைந்துள்ள சண்முகநாதர் ஆலயம் .
2. இந்த கிராமத்தையும், இந்த ஆலயத்தையும் வழி நடத்தும் தவத்திரு குன்றக்குடி அடிகளார் மற்றும் ஆதின மடம்.(தமிழால் இவர் தமிழ் உலகத்தை ஆட்சி செய்கிறார்)
3. குடவரை கோவில் ‘.. அதுபற்றி விளக்கம் பெற
you tube link: kudavaraikovil kundrakudi

இதற்கு அடுத்தபடியாக நான்காவது சிறப்பாக நாங்கள் குறிபிடுவதும், குன்றக்குடிக்கு பெருமை சேர்க்கும் விதமாக அமைந்திருப்பதும் குயில் தோப்பு. இது குன்றக்குடியில் ஊர்புறத்தையொட்டி அமைந்த, பூக்கள் மற்றும் பழ மரங்கள் நிறைந்த எழில் சூழ்ந்த இடமாகும். குயில் தோப்பின் முக்கிய சிறப்பம்சம் இங்கு காணப்படும் பலவகையான பறவைகள். குன்றக்குடி (குயில் தோப்பு) மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நிறைய குளங்களும், ஒவ்வொரு குளங்களையும் அடுத்தடுத்த குளங்களுடன் இணைக்கும் அற்புதமான நீர்வழி இணைப்பு மேலாண்மையும் இங்கு நமது முன்னோர்களால் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்துள்ளது.
குளங்கள், அதில் காணப்படும் மீன்கள், மற்றும் குளங்களைச் சுற்றியுள்ள மரங்கள் இவையே இங்கு ( குயில் தோப்பு ) நிறைய பறவை இனங்கள் வாழ்வதற்கு ஏற்ற சுழலாக அமைந்திருக்கின்றது. இது பறவைகளுக்கு மட்டுமின்றி அவற்றை கண்டுகளிக்கும் பறவைகள் ஆர்வலர்களுக்கும் இயற்கையின் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது என்றால் அது மிகையாகாது.
எங்கள் 2015 கணக்கெடுப்பின்படி, 65 பறவை இனங்களை நாங்கள் குயில் தோப்பில் இனம் கண்டு வகைப்படுத்தி இருக்கிறோம். குளங்கள் மாசுபடாமல் நல்ல நிலையில் இன்றும் இருப்பதால் எராளமான பறவை இனங்கள் இங்கு வாழ்கிறது.
koel
koel8

Rose Ringed Paarakeet
koel1

Lotten’s Sunbird
koel9

Pale Billed Flower Pecker

[ இந்த படங்கள் குயில் தோப்பில் எடுக்கப்பட்டவை ] இந்த மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரே பறவைகள் சரணாலயம் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் ஆகும். இது இங்கிருந்து 23 கிமீ தொலைவில் உள்ளது. இந்த வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் உள்ள பறவைகள் குன்றக்குடியை சுற்றியுள்ள குளங்களில் உணவுக்காக காத்திருப்பதை இன்றும் காண முடியும்.
இங்கு சமூக காடுகளை உருவாக்குவதன் மூலம் பறவைகள் எண்ணிக்கையை அதிகப்படுத்தவும் மற்றும் இயற்கையை வளப்படுத்த முடியும் என நம்புகிறோம்.
குன்றக்குடி’. மதுரையில் இருந்து 76 கிமீ
குன்றக்குடி ‘. சிவகங்கையில் இருந்து 47 கிமீ

kundrakudi-kulam

குன்றக்குடி குளங்களின் அமைப்பு முறை Google Map