வேப்ப மரம்(NEEM TREE)
English Name | Tamil Name | Botanical Name |
NEEM TREE | வேப்ப மரம் | AZADIRACHTA INDICA S. JUSS |
அரபு மொழியில் அஸாடிராக்டா என்பது உன்னதமான மரம் [Noble Tree] என பொருள்படும். இன்டிகா என்பது இந்தியாவில் பெருமளவில் உள்ளது எனக் குறிப்பிடுகிறது. வடமொழியில் நோய் தீர்க்கும் மரம் – அரிஷ்டா – எனக் கூறுவர். பொதுவாக, வேம்பு ஒரு பசுமைமாறா மரம். கோடையில் இலையுதிர்ந்து கொண்டே, புதுத்தளிர்களை உருவாக்கிக் கொள்ளும். மார்ச் – ஏப்ரலில் பூத்துக் குலுங்கும்.
பயன்கள்:
தழை கால்நடைகளுக்குத் தீவனமாகும்.
பூக்கள்:
பூக்களில் தேன் திரவம் உள்ளது. மார்ச் – ஏப்ரல் மாதங்களில் தேனீக்களின் தேவையைப் பூர்த்தி செய்துவிடும்.
வேப்பெண்ணெய்:
பயிர் பாதுகாப்புப் பொருளாகவும், பயிர் பாதுகாப்பு இரசாயனங்களுக்கு எமல்சிபையராகவும் [emulsifier] எண்ணெய் உபயோகப்படுகிறது. பயிர் பாதுகாப்புச சக்தியுள்ள சத்துக்கள் வேப்பெண்ணெயிலும் உள்ளன.
வேப்பம் பிண்ணாக்கு
வேப்பம் பிண்ணாக்கை உரமிடலாம்.
வேப்பிலை
உலர்ந்த இலைகளை புகைக்கும் பொழுது, இப்புகை வீடுகளில் உள்ள கொசுக்கள் மற்றும் இதரப் பூச்சிகளுக்கு நச்சாகும். உலர்ந்த வேப்பிலையைப் பைகளில் போட்டு, பெட்டிகள், அலமாரிகள் ஆகியவற்றில் வைத்தால், அந்துக்கள், கரப்பான்கள் ஆகியவை வந்திடாது.
சுற்றுப்புறத்தைத் தூய்மைப்படுத்தும் திறன்
வேம்பு ஒருவித மகிழ்ச்சியைத் தரும் மரம். ஆண்டு முழுவதும் பசுமை மாறா மரமாக இயங்கி, நல்ல நிழல் கொடுக்கும்.
பயிர் முறை:
வேப்பமரம் எங்குமே வளரக் கூடியது. கடுமையான வெப்பத்தைத் தாங்குவதுடன் கூட, கடுமையாக வறட்சியையும் தாங்கிடும்.