அரச மரம்(FICUS RILIGIOSA)
English Name | Tamil Name | Botanical Name |
FICUS RILIGIOSA | அரச மரம் | FICUS RILIGIOSAL |
ஃபைகஸ் ரிலிஜியோசா (FICUS RILIGIOSA L ) அத்திக் குடும்பத்தைச் சார்ந்ததினால் ஃபைகஸ் என்ற முதற்பெயரும், சமய சம்பந்தமானது என்று குறிக்கும் ரிலிஜியோசா பெயரும் இணைத்து வழங்கப்படுகிறது. வடஇந்தியாவில் இதனை பீப்பில் என்பர் .தாவரக் குடும்பம் மோரேசி.
பொது விவரம்
பறவைகள் உண்டு, அவற்றின் மூலம் விதைகள் வெளியேறும் போது இம்மரம் பரவும் . ஜூலை, ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை பூக்கும், அதன்பின் பழங்கள் உருவாகி உதிரும்.
தழை .,
இது கால்நடைகளுக்கு நல்லதொரு தீவனமாகும். யானைகள் இதனை விரும்பி உண்ணும்.
மரம் .,
இது சுமாரான வலிமையுடையது. காற்றிலுள்ள சல்பர் டைஆக்ஸைடு என்ற நச்சுவாயுவை சுத்திகரிப்பதில் அரச மரம் மிகவும் திறனுடையது. எனவே, இந்த நச்சுவாயு அதிகமுள்ள இடங்களில் இதனை வளர்க்கலாம்.
பயிர் முறை .,
அரச மரத்தை, விதை மூலம் நாற்றாகவும், நாற்றுக் குச்சிகளாகவும் நடலாம். பறவைகளுக்கு சிறந்த புகலிடமாக இருக்கும். நல்ல நிழல் தரும் மரம்.