மாவிலங்கு(THE SACRED BARNA)
English Name | Tamil Name | Botanical Name |
THE SACRED BARNA | மாவிலங்கு | Crateva Magna |
அழகு மரமாகப் பூத்துக் குலுங்கும். காடுகளிலும், சமவெளிகளிலும் சிறிது ஈரச்செழிப்புள்ள நிழல் விழும் பகுதிகளிலும் வளருகிறது தமிழ்நாட்டில், வறண்ட பகுதிகளிலும் உள்ளது. மாவிலங்கு 12-14 மீட்டர் உயரம் வளரும் மரமாகும். மேற்பகுதியில் நன்கு கிளைத்து அடர்ந்திருக்கும். பட்டை சாம்பல் நிறமுடையது.இலைகள் மும்மூன்றாக, நடுவில் உள்ள இலை சற்று நீளமாக இருக்கும். பிப்ரவரி மாதத்தில் இலையுதிர்த்து, பின்னர் கிளை நுனிகளில் 5 செ.மீ அளவுள்ள பூங்கொத்துக்கள் உருவாகும். இவற்றில் பழுப் பு கலந்த வெண்மைநிறப் பூக்கள் அடர்ந்திருக்கும். இதுசமயம், தொலைவிலிருந்து பார்க்கும்பொழுது, மரம் முழுவதும் வெண்பனி போர்த்தியதுபோல் காணப்படும்.
பூக்கள்
பூக்களில் தேன் சத்து உள்ளது. மார்ச் மாதத்தில் தேனீக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும்.
மரம்
மரத்தை வெட்டியதும் மஞ்சள் நிறமாக இருக்கும் . பின்னர் கருமை நிறம் பெற்றுவிடும். சுமாரான கடினமுடையது. கனமில்லாதது. தீக்குச்சிகள் தயாரிக்கலாம்.
இதரப் பயன்கள்
பூக்கும் சமயம் மிகவும் அழகாக இருப்பதால் இதனை அழகு மரமாக வளர்க்கலாம். பிற மரங்களுடன் நட்டால், நன்கு அழகாக இருக்கும்.
மருத்துவப் பயன்கள்
பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆயுர்வேத மருத்துவத் தந்தை சுஸ்ரூதர், மாவிலங்கின் மருத்துவ தன்மையைக் கண்டறிந்துள்ளார். ஆயுர்வேத மருத்துவத்தில் ‘வருணா’ என்ற பெயரில் மாவிலங்கு இடம் பெற்றுள்ளது.
இலை
பல்வேறு அருமையான பண்புகளுடைய இலைக்காக, மருத்துவமனைகளில் ஒன்றிரண்டு மரங்களை வளர்ப்பது அவசியம்.
பயிர் முறை
மாவிலங்கு மரம் தமிழகத்தில் எங்குமே வளரக் கூடிய மரமாகும். இயற்கையில், பறவைகளே பழங்களை உண்டு, விதையைச் சிதறி விடுகின்றன. அதன் பயனாய் பிற இடங்களில் மாவிலங்கு பரவ வும், மற்றும் வேர்ச் செடிகளும் வளர்ந்து, மரத்தை வெட்டிய இடங்களில், புது மரங்களாக வளர்ந்து விடும். பழுத்த கனிகளிலிருந்து விதையை எடுத்து, நன்கு கழுவி, உலர்த்தி சேகரித்து வைத்துக் கொள்ளலாம். சுமார் 10 மாதங்கள் வரை, முளைப்பு திறன் இருக்கும்.