3

மோதகவல்லி (Modhagavalli)

ENGLISH NAME : Modhagavalli

TAMIL NAME : மோதகவல்லி (கொழுக்கட்டை மரம் ஆனைத் தொண்டி)

Scientific Name : டெரிகோடா அலாடா (Pterygota alata R.Br.Syn.Srerculia alata).
பொது விவரம்
கிழக்கு இமயமலைப் பகுதி, அஸ்ஸாம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையில் வட கன்னடத்திலிருந்து தெற்குப் பகுதி எல்லாம் காணப்படுகிறது. அந்தமான் தீவிலும் உள்ளது. பசுமை மாறாக் காடுகளில் காணப்பட்டாலும். வறண்ட பகுதிகளிலும் வளரக் கூடியது.
மோதகவல்லி மரம் ஓங்கி உயர்ந்து வளரும் மரமாகும். 3 மீட்டர் சுற்றளவுடன் 45 மீட்டர் உயரத்தையும் எட்டிவிடும். அந்நிலையில் உருண்டு தடித்த மரப்பகுதி 30 மீட்டர் உயரம் வரை இருக்கும். அடிமரத்தின் சிறிது உயரத்திலிருந்தே நீள வாட்டத்தில்- கிடை மட்டத்தில் தழையமைப்பை உருவாக்கிக் கொண்டு வளர்ந்திடும். இதன் காரணமாகஇ சாலையில் வளர்க்க விரும்பப்படுகிறது.
கிளைகளின் நுனிகளில்இ இலைகள் அடர்ந்திருக்கும். இலை ஒவ்வொன்றும் 10-25 செ.மீ நீளமும்இ 7-20 செ.மீ அகலமும் கொண்டு நீண்ட வட்டத்தில் இருதய வடிவமைப்புடன் இருக்கும். இலையுதிர்க்கும் தன்மையுடையது.
மார்ச் மாதத்தில் பூக்கள் தோன்றிடும். கிளைகளில் உதிர்ந்த இலைக் காம்பு வடுக்களின் அருகே பூங்கதிர்கள் உருவாகும். ஆண்இ பெண் பூக்கள் தனித் தனியானவை சிறிய காம்புகளுடைய பூங்கதிர்களில் 2.5 செ.மீ விட்டமுள்ள பழுப்பு மஞ்சள்நிறப் பூக்கள் மலர்ந்திடும்.
இதனை அடுத்துஇ பெரிய கடினமான தோடுடைய கொட்டைகளைப் போன்றுஇ 12-15 செ.மீ அளவில் ஒரு அளவிற்கு உருண்டையான காய்கள் உருவாகும். இதனுள் 5 செ-மீ நீளமுள்ள தட்டையான விதைகள் பெரிய இறக்கையுடன் இருக்கும். ஒரு காயில் சுமார் 40 விதைகள் இருக்கும்.

1
மரம்
மோதகவல்லி மரத்தை எளிதிலே அறுத்துஇ வேலை செய்திடலாம். ஆனால் பூச்சி, பூசுணங்கள் எளிதில் பாதிக்கும். விறகு நன்கு எரியும். வெப்பத்திறன் 5160 கலோரிகள்.
பிற பயன்கள்
சாலை ஓரங்களுக்கு மிகவும் உகந்த மரம்.
பயிர் முறை
ஈர செழிப்புச் சூழ்நிலையை விரும்பும் மரமாயினும், ஒரு அளவிற்கு வறட்சியையும் தாங்கிடும். வறட்சியில் இலையுதிர்த்திடும் தன்மை காரணமாக, நிலைத்திடும். பெரிய மரமாக வளரும் ஆற்றலுடைய மரம். எனவே சாலை ஓரங்கள், குளம் மற்றும் கால்வாய்க் கரைகள், மண் அரிமானம் ஏற்படும் ஆற்றுக் கரைகள் ஆகிய இடங்களில் எல்லாம் நட்டு வளர்க்கலாம். ஆண்டிற்கு 1000 மில்லி மழையளவிற்கு மேல் உள்ள இடங்களில் எல்லாம் இந்த அருமையான மரத்தை வளர்க்கலாம். பூங்காக்களிலும் இது இடம் பெறுவது அவசியம்.

3 2
மோதகவல்லி மரத்தை வளர்க்க, விதையை நேரடியாக விதைக்கலாம், அல்லது நாற்றுவிட்டு நாற்றுக்களையும் நடலாம். நாற்றுக் குச்சிகளும் நன்கு வளர்ந்திடும். முற்றிய காயிலிருந்து எடுத்த விதையை உடன் விதைக்க வேண்டும். நாற்றுவிட்டால், 20 செ-மீ உயர நாற்றுக்களை எடுத்து நடுவது நல்லது. ஆரம்பத்தில் 2 – 2 மீ இடைவெளியில் நட்டு, அடர்ந்ததும் ஊடுவரிசை மரங்களை எடுத்திடலாம். இதனால் மரம் ஓங்கி வளர்ந்திடும்.