நீல மயில்

ஆண் நீல நிற கழுத்து மற்றும் நெஞ்சுடனும் அழகான கண்ணாடி போன்ற வழவழப்புடன் கூடிய பச்சை நிற நீண்ட வால் சிறகுகள் நிறைய கண்கள் போன்ற அமைப்புடன் இருக்கும்.

சங்க இலக்கியத்தில் நீல மயில்

போரில் வீர மரணம் அடைந்தவர்கள் நினைவாக நடுகல் நிறுத்தும் வழக்கம் தொன்மையானது. அவ்வாறு நிறுவப்படும் நடுகல்லில் வீரன் பெயரினைப் பொறிப்பதோடு அதனைப் பூமாலையும் மயில் தோகையும் கொண்டு அலங்கரிப்பர் என்பதனை

  • பரலுடை மருங்கிற் பதுக்கை சேர்த்தி
  • மரல்வகுந்து தொகுத்த செம்பூங் கண்ணியொ
  • டணிமயில் பீலி சூட்டிப் பெயர்பொறித்
  • தினிநட் டனரே கல்லும்….

எனப் புறநானூறு 264 ஆம் பாடல் வரிகள் தெரிவிக்கின்றன.