Monthly Archives: April 2020

அகத்தி(Vegetable hummingbird )

அகத்தி 

ENGLISH NAME TAMIL NAME BOTANICAL NAME
Sesbenia grandiflora pers    அகத்தி  செஸ்பேனியா கிராண்டிபுளுரா

விஞ்ஞானப் பெயர் : செஸ்பேனியா கிராண்டிபுளுரா (Sesbenia grandiflora pers)   

தாவரக் குடும்பம் : ஃபாபேசி செஸ்பேனியா என்ற முதற்பெயர் சித்தகத்தியின் “எகிப்தியப் பெயரிலிருந்து ஏற்பட்டுள்ளது.

பொது விவரம் 

அகத்தியின் தாயகம் இந்தோனேஷியா, இருப்பினும் அகத்தி நாடெங்கும் பரவியுள்ளது.வேளாண்மையுடன் இணைந்து காற்றுத் தடுப்பு, நிழல் மற்றும் குளிர் சூழ்நிலை ஆகிய பயன்களுக்காகவும், வெற்றிலைக் கொடிக்கு செவிலித் தாயாகவும் பயன்படுகிறது. அகத்தி ஓங்கி, ஒடுங்கி, 6-9 மீட்டர் உயரம் வளரும்.துனி மரமாக இருந்தால், சிறிது பக்கவாட்டில் கிளைகளைக் பரப்பிக்கொண்டு, வளரும் எனினும் ஓங்கி உயர்ந்து வளரும் இயல்பே இதனிடம் உள்ளது.துரிதமாகவும் வளர்ந்திடும். அகத்தியில் இருவகைகள் உள்ளன. சாதாரணமாக, வெள்ளைப் பூக்களுடைய வகையே எங்கும் பரவியுள்ளது. இதனைத் தவிர சிவப்பு பூக்களுடைய வகையும் உள்ளது.இதனை செவ்வகத்தி என்பர். மகரந்த சேர்க்கை மூலம், இவ்விரு வகைகளும் இணைந்த ரகமும் உள்ளது. டிசம்பர்- ஜனவரி மாதங்களில் பூக்கும். செவ்வகத்தி சிறிது முன்பே செப்டம்பரிலிருந்து பூக்கத் துவங்கும். இப்பூக்களால் கவரப்பட்ட வௌவால்கள், பூக்களில் மகரந்த சேர்க்கை செய்கின்றன. இதன் பின்னர் 30-45 செ.மீ அளவில் நீண்ட காய்கள் உருவாகி, நெற்றுக்களாக முற்றிடும். நெற்றில் 15-20 விதைகள் இருக்கும்.

இலை hqdefault

பசுமை இலைகள் மனிதனுக்குச் சிறந்த கீரையாகும். கீரை வகைகளிலே அதிக அளவில் புரதம் உடையது அகத்தி.

பூக்கள் image

பூக்களில் தேன் சத்து உள்ளது. டிசம்பர்-ஜனவரி மாதங்களில் தேனீக்களின் தேவையைப் பூர்த்தி செய்திடும்.

விதை 

உண்ணுவதற்கு ஏற்றதல்ல.

மரம் 

மென்மையானது, மிகவும் மிருதுவானது. மரத்தில் 66.4% அளவில் ஹாலோ செல்லுலோசு இருப்பதால், காகிதம் தயாரிப்பதற்கு பயன்படும்.

பயிர்முறை 

அகத்தி எங்குமே வளரக் கூடியது. செவ்வல், கரிசல் முதலிய மண் வகைகளிலும் வளர்ந்திடும். உவர் நிலத்திற்கும் ஏற்றது. நீர் தேங்கும் பகுதியிலும் அகத்தி வளர்ந்திடும். சிறு செடியாக வளர்ந்த நிலையில் நிலத்தில் 5 செ.மீ அளவிற்கு நீர் தேங்கிவிட்டால், வேர்களுக்கு காற்றை எடுத்துச் செல்லும் ஒரு தனித்த அமைப்பு (Aerenchyma) உறுவாகிவிடும். புகையைக் கக்கும் தொழிற்சாலைகள் உள்ள இடங்களில் வீடுகளில் மிகவும் அவசியமாக, அகத்தி பயிரிடல் வேண்டும். வீட்டைச் சுற்றிலும் உள்ள காலியிடங்களில் அகத்தியை வளர்த்தால், தூசியை வடிகட்டிடும்.