மரா மரம்(Sonneratia)
English Name | Tamil Name | Botanical Name |
Sonneratia | மரா மரம் | Sonneratia ApetalaBuchham |
கடல், நிலத்தை அரித்துக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில், கடலை மேடிட்டு நிலமாக்கும் அரிய பணியை மராமரம் செய்கிறது.
மராமரம் கடலும் நிலமும் சேரும் இடங்களில் சதுப்பு நிலங்களில் வளரும் மரமாகும். தமிழ்நாட்டில் பிச்சாவரத்தில் உள்ளது.
மராமரம் 8-10 மீட்டர் அளவில் உயர்ந்து வளரக் கூடியது. மரத்தைச் சுற்றிலும், மூச்சுவிடுவதற்காக வேர்களிலிருந்து, கூர்மையாகவும் செங்குத்தாகவும் உள்ள கார்க்குப் போன்ற குத்துவேர்களை (pneumatophores) உருவாக்கிக் கொண்டு வாழும் இயல்புடையது. ஜூன் மாதத்திற்கு மேல், கனிகள் உருவாகும். 2 செ.மீ அளவில் உருண்டையாக இருக்கும். புற இதழ்கள் கிரீடம் வைத்தது போன்று இணைந்து, கனிகள் மிதப்பதற்கு உதவிடும். விதைகள் பின்னர் மிதந்து சென்று, இதரச் செடிகளால் தடுத்து நிறுத்தும் இடங்களில் முளைத்து வளர்ந்து விடும்.
கடலைத் தூர்த்துக் கழனியாக்கும் திறனுடைய மராமரம், நிலத்தைக் காக்க மிகவும் இன்றியமையாத மரமாகும். கடல் அரிப்பால் பல இடங்களில், நிலம் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், இதனைப் பல்வேறு இடங்களிலும் பயிரிடுவது அவசியமாகும்.