வக்கணி(Mountain parsimon)
English Name | Tamil Name | Botanical Name |
Mountain parsimon | வக்கணி | Diospyros Montana roxb |
பொது விவரம்
இந்தியா முழுவதும் சிறு எண்ணிக்கையில் காணப்படும் மரம். குறிப்பாக இலையுதிர்க் காடுகளில் அதிகமாகப் பார்க்கலாம். தமிழகத்தில் மலை அடிவாரத்திலிருந்து 1200 மீட்டர் உயரப் பகுதி வரை உள்ளது.
சாதாரணமாக சமவெளிகளிலும் மலை அடிவாரத்தில் 5 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது. ஆனால் 20 மீட்டர் உயரம் வரை வளரும். இலையுதிர்க்கும் மரம் மார்ச் மாதத்தில் புதுத் தளிர்களைக் காணலாம்.
மார்ச்– ஏப்ரல் மாதங்களில் பூக்கும். ஆண் பூக்கள் பூங்கொத்துகளில் இருக்கும். பெண் பூக்கள் தனித் தனியாக இருக்கும். இவை பச்சை கலந்த மஞ்சள் நிறமுடையவை.
இதன்பின்இ மரத்தில் கனிகள் உருவாகும். 1-5- 2.0 செ.மீ அளவுடைய இக்கனிகள் உருண்டையாக சற்று கூம்பு வடிவத்துடன் இருக்கும். ஆரம்பத்தில் பச்சை நிறக் காய்களாக வளர்ந்து கனியும் பொழுதுஇ ஆரஞ்சு நிறக் கனிகளாக மாறும். அக்டோபர் மாதத்தில் இக்கனிகளைக் காணலாம். பூவின் புற இதழ்கள் கனியின் முனையில் இணைந்திருக்கும் கனியினுள் 3-6 கருப்பு விதைகள் இருக்கும்.
கனி
கசப்புடையது. உண்பதில்லை. நீர் நிலைகளில் மீன்களை மயக்கமடையச் செய்யஇ கனிகளையும் இலைகளையும் இடித்து பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.
மரம் மேஜை நாற்காலிகள் செய்யவும்இ கூரைச் சட்டங்கள் தயாரிக்கவும்இ வேளாண் கருவிகள் செய்யவும் ஏற்றது. சிற்பங்கள் செதுக்குவதற்கும் ஏற்றது. வக்கணிஇ நல்லதொரு எரிபொருள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வெப்பத்திறன் 5125 கலோரிகள்.
பயிர் முறை
கனிகளிலிருந்துஇ விதையெடுத்துஇ நாற்றுக்களை நட வேண்டும். நாற்றங்காலில் 30 செ.மீ உயரம் வளர்ந்ததும் எடுத்து நடலாம். நடவு இடைவெளி 3-4.5 மீட்டர்.