சம்பை ஊற்று (Sambai Uthu)

சம்பை ஊற்று (Sambai Uthu)

சம்பை ஊற்று காரைக்குடி மக்களின் ஒரே நீர் ஆதாரம். சம்பை ஊற்று 1987 முதல் தொடர்ச்சியாக இன்று வரை காரைக்குடி மக்களின் நீர் தேவையை பூர்த்தி செய்கிறது. தமிழ்நாட்டின் தினசரி water supply  செய்யும் ஒரே நகராட்சி காரைக்குடி நகராட்சி மட்டுமே. அதற்கு காரணம் சம்பை ஊற்று.
இந்த சம்பை ஊற்று 3000 வருடங்கள் பழமையானது. சம்பை ஊற்றின் மேல் அமைந்துள்ள சதுப்பு நிலங்கள் சென்னையில் உள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திற்கு இணையானது. அந்த சதுப்பு நிலங்களில் வளர்ந்துள்ள சம்பை என்னும் நாணல் செடிகளின் பெயரால் இது சம்பை ஊற்று என அழைக்கப்படுகிறது. சம்பை ஊற்று ஒரு இயற்கை நீர் ஊற்று. உலகில் உள்ள இயற்கை நீரூற்றுகளில் (aquifers) இந்தியாவில் அமைந்துள்ள ஒரே நீரூற்று சம்பை ஊற்று மட்டுமே.

ஆதாரம் : https://en.wikipedia.org/wiki/List_of_aquifers

3

சம்பை நாணல்செடி

8

Google Map ல் சம்பை ஊற்றின் எல்கை

Sambai Uthu is located in Karaikudi aquifer which is demarcated near the crystalline contact at Padarakudi in the west, Devakottai Rastha in the east, Sankarpuram in the south and extends in N.E. direction in between Pallatlur and Sakkottai towards Arantangi in Pudukottai district along Alangudi Tanjore line and also in S.W. towards Kallal. This is commonly identified as ‘Sambai Uthu aquifer’, and the head works near Karaikudi old bus stand only is named as ‘Sambai Uthu’.

சம்பை ஊற்று 30 வருடங்களுக்கு முன் இயற்கையாகவே ஆர்டிசியன் ஊற்றுபோல் நீரை வெளியிடும் தன்மை கொண்டவையாக இருந்தது. தற்போது அதிகப்படியான நிலத்தடி நீர் உறிஞ்சப் படுவதாலும், சம்பை ஊற்றுக்கு நீர் ஆதாரப் பகுதிகள் குறைந்து விட்டதாலும், இது நீர் வெளியிடும் தன்மையை இழந்துவிட்டது. இன்றும் 2018 ல்   சம்பை ஊற்று பகுதியில் அமைந்துள்ள போர்களில் 100 அடியிலேயே நல்ல தண்ணீர் கிடைக்கிறது.

13

சம்பை ஊற்று  pumping station .

சம்பை ஊற்று நீர் அதிகம் உறிஞ்சப்படுவதாலும், சம்பை ஊற்றுக்கு நீர் சேமிப்பு திட்டமிடல் இல்லாததாலும் கொஞ்சம், கொஞ்சமாக சம்பை ஊற்று தனது தனித்தன்மையை இழந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் 20, 30 ஆண்டுகளில் சம்பை ஊற்று முழுவதுமாக வற்றிவிடும். இதனால் தமிழ்நாட்டின் மிகத் தொன்மையான நகரமான காரைக்குடி (UNESCO Approved city)அழிந்து போகும் ஆபத்து உள்ளது.

Link:http://www.thehindu.com/tp- /UNESCO-plan-to-preserve-Chettinad-buildings

 

18

(காரைக்குடி நகர் ஒரத்தில் அமைந்துள்ள சம்பை ஊற்றும் அதன் மேல் அமைந்துள்ள கண்மாய்களின் தோற்றம்)

காரைக்குடி நகருக்கு ஆறுகளோ மற்றும் சிறப்பு குடிநீர் திட்டங்களோ இல்லை. காரைக்குடி மக்களின் ஒரே நீர் ஆதாரம் சம்பை ஊற்று மட்டுமே. இந்த சம்பை ஊற்று காக்கப்பட வேண்டுமேயானால் அதன் மேல் அமைந்துள்ள 3 கண்மாய்கள் அதன் வரத்துக் கால்வாய்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.

19

Google Map-ல் சம்பை ஊற்று அதன் மேல் அமைந்துள்ள 3 கண்மாய்கள் அதன் வரத்துக் கால்வாய்கள் காட்டும் வரைபடம்.

1. கோனேரி கண்மாய்
2. அதலை கண்மாய்
3. காரைக்குடி பெரிய கண்மாய்
இந்த 3 கண்மாய்களும் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு சம்பை ஊற்றுக்கு மிக முக்கிய நீர் ஆதாரமாக விளங்குகிறது. இதில் கோனேரி கண்மாய் 140.48 ஏக்கர் பரப்பளவு உடையது. இதன் பாசனப்பரப்பு 249.89 ஏக்கர். அதலை கண்மாய் 46.78 ஏக்கர் பரப்பளவு உடையது. இதன் பாசனப்பரப்பு 126.49 ஏக்கர். காரைக்குடி பெரிய கண்மாய் 136.10 ஏக்கர் பரப்பளவு உடையது. இதன் பாசனப்பரப்பு 289.60 ஏக்கர். இந்த கண்மாய்களில் 28 வகையான நீர்வாழ் பறவை இனங்கள் குறிப்பாக வலசை பறவைகள் வருவது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் கண்மாயை ஒட்டியுள்ள சிறு காடுகளில் அழியும் நிலையில் உள்ள தேவாங்கு, பாம்புகள் வாழ்கின்றன. மேலும் கண்மாய்களில் மீன், ஆமை, தவளை இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த 3 கண்மாய்களை பாதுகாப்பதால் சம்பை ஊற்று பாதுகாக்கப்படும். மேலும் இந்த 3 கண்மாய்களை நம்பி உள்ள 665.98 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும். மேலும் இந்த 3 கண்மாய்களை பாதுகாப்பதின் மூலம் பல உயிரினங்கள் பாதுகாக்கப்படுவதோடு, உலகின் தொன்மையான சம்பை ஊற்று பாதுகாக்கப்பட்டு அடுத்த தலைமுறைக்கு செல்லும்.

4 17

(அதலை கண்மாய் மற்றும் அதன் பாசனப் பகுதியில் நடைபெறும் விவசாயம்)

(கண்மாய் பகுதியில் வாழும் உயிரினங்கள்)  

16 15 1 9 dfg 1011 5 6 7  2 20

 

சம்பை ஊற்று பற்றிய பத்திரிக்கை செய்தி.

14

Link : https://indiankanoon.org/doc/323307/