Tag Archives: சீதாப் பழம்

சீதாப் பழம்(Custard Apple)

English Name Tamil Name Botanical Name
Custard  Apple சீதாப் பழம் Annona Squamosa

தாவரக் குடும்பம்  : அன்னோனேசி.  இராமாயண   பெயர்கள்,  இப்பழ  வகைகளுக்கு  வழங்கப்படுகின்றன . சீதாப்  பழம்  சீதையையும்,  ராம்சீதா  இராமனையும்,  லக்ஷ்மண்  பால் (செரிமேலா பழம்) என்பது  லக்ஷ்மணனையும்   குறிக்கும் .

2

சீதாப்பழ  மரம்  5-6  மீட்டர்  உயரம்  வளரும் . குறுமரமாகக்  காட்சிதரும். இலைகள்  சிறிது பளபளப்பாக,  இருக்கும்  மார்ச்- ஏப்ரலில்  பூக்கும், பூக்கள் வெளிர்  பச்சை  நிறத்தில்   இருக்கும். இதன்பின்,   வெளிர் பச்சை  நிறத்தில், திரள்  கனியாக  காய்கள்  உருவாகும்.  பல செதில்கள்  இணைந்த  உருண்டையான  கனி  பூத்ததிலிருந்து  பழமாக  மாற  நான்கு  மாதங்கள்  ஆகும். மரம்  ஒன்று  20  கனிகள் கொடுக்கும். சதைப்  பற்றுள்ள  கனியில், விதைகள்  அதிக  இடத்தை ஆக்கிரமித்திருக்கும்.  இனிப்புச் சதை.

தழை :

ஆடு,  மாடுகள்  உண்பதில்லை. இலையிலும்  பூச்சிக்  கொல்லிச்  சத்து உள்ளது. இலையின்  மேலாகவுள்ள  மெழுகிலும்  கூட,  புழுக்களைக் கட்டுப்படுத்தும்  ஸேஸ்குயிடர்பீன் (Sesquiterpene ) சத்து  உள்ளது.

மரம்

ஐந்து  சதுர  மீட்டர்  பரப்பில்  வளர்ந்திருக்கும்  ஒரு  மரத்தைக்  கொண்டே, ஒரு  எக்டேர்  பரப்பிலுள்ள பயிரைக்   காத்திடலாம்.  வாகனங்கள்  உமிழும்  புகையிலுள்ள  ஈயத் தூசியை,  சீதா  மரத்  தழைப்  பகுதி  மிகவும்  சிறப்பாக  வடிகட்டும்.

1

பயிர்முறை

சீதா  மரம்  வறண்ட  செம்மண்  மற்றும்  சமவெளி  நிலங்களில் மானாவாரியாகப்  பயிரிடக்கூடியது.  பாறைப்  பகுதியில், குறிப்பாக உருளைக்கற்கள்  நிறைந்த  இடங்களில் கூட,  வளர்ந்திடும்.  ஓட்டுக்கட்டப்பட்ட கன்றுகள்  நட்ட  மூன்று  வருடங்களில்  காய்க்கத் துவங்கி  விடும்.  ஓட்டுக்கட்டாத  கன்றுகள்  காய்ப்பதற்கு      5  ஆண்டுகளுக்கு மேல்  ஆகும். பறவைகள்  இப்பழத்தை  விரும்பி  உண்ணும்.    ஈழத் தமிழரால் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது.