Tag Archives: alba varmulticaulis

முசுக்கட்டை(Mulberry Tree)

 

English Name Tamil Name Botanical Name
Mulberry Tree

 

முசுக்கட்டை M  alba var.multicaulis   / M  alba var.atropurpurea

முசுக்கட்டையில் இருவகைகள் உள்ளன பட்டுப் பூச்சி வளர்பதற்காகக் குத்தாக வளர்ந்து அதிகமாகத் தழை கொடுக்கும் வகையை மோரஸ் ஆல்பா வெரைடி மல்டிகாலிஸ் (M  alba var.multicaulis) என்பர். இந்த வகைச் செடிகளே தோட்டங்களில் பட்டுப் பூச்சி வளர்க்க, பயிரிடப்படுகிறது. மற்றொரு வகையான  மோரஸ் ஆல்பா வெரைடி அட்ரோபர்பூரியா (M  alba var.atropurpurea) என்பதை கனிகளுக்கான மரமாக வளர்க்கின்றனர். எனினும் இரண்டும் மரவகையைச் சேர்ந்தவையே. பட்டுப்புழு வளர்க்கும் வகையையே இங்கு விவரிக்கப்படுகிறது.

1.Musukkattai maram

முசுக்கட்டை ஒரு சிறு மரம். 7.5-9.0 மீட்டர் உயரம் வளருகிறது. மரமாக வளர்த்தால் செங்குத்தாக வளர்ந்து, சிறிது உயரத்திலேயே கிளைகளை உருவாக்கி படர்ந்த தழையமைப்புடன் இருக்கும். சிறு செடிகளில் பட்டை மிருதுவாக இருக்கும். முற்றிய மரங்களில் பட்டை கரடுமுரடாக மாறிவிடும். 30 செ.மீ பருமனுடைய மரங்களை வெட்டினாலும் தழைத்து விடும். மார்ச்- ஏப்ரல் மாதங்களில் பூக்கும். ஆண்பூக்களும், பெண்பூக்களும் தனித்தனி கொப்புகளில் இருக்கும். சமயத்தில் ஒரே கிளையிலும் இருக்கலாம். ஏப்ரல்-ஜூன் மாதங்களில் பெண் பூங்கொத்துக்கள் கனிக் கொத்துகளாக மாறும். 5 செ.மீ  நீள கனிக் கொத்துக்கள் வெண்மையாகவோ அல்லது சிவப்புச் சாயையுள்ள ஊதா நிறமாகவோ இருக்கும்.கம்புளிப் புழு வடிவத்தில் அதே அளவில் இருக்கும் (அதனால் சில இடங்களில் கம்பளிப் பூச்செடி எனக் கூறுவர்). கனிகளுக்குத் தொலி கிடையாது.தொட்டு அழுத்தினாலே பழஇரசம் கசிந்து விடும்.

இலை

பசுமாடுகளுக்கு காலையும், மாலையும் ஒரு சேர் அளவில் முசுக்கட்டைத் தழையைத் தீவனமளித்தால், பால் அளவு அதிகரிக்கும். தினமும் 6 கிலோ அளவில் தீவனமாகத் தழையைக் கொடுக்கலாம்.கோழித்தீவனத்திலும் சிறிது உலர்த்திய தழையை 6% அளவில் கலந்திடலாம்.  பட்டுப் புழுக்கள் பிற இலைகளை எல்லாம்விட, முசுக்கட்டை இலையை விரும்பி உண்பதற்கு, இந்த இலையிலுள்ள மூன்று வகை சத்துப் பொருட்கள் காரணமாகும்.

2.Musukkattai maram

  1. கவர்ச்சி: இலைகளில் சிட்ரல் (Citral) வினலைல் அசிடேட் (Vinalyacetate), லினலால் (Linalol), டெர்பினைல் அசிடேட் (Terpenylacetate) மற்றும் ஹெக்சினால் (Hexenol) என்ற பொருட்கள் இலைக்குக் கவர்ச்சித் தன்மையைக் கொடுக்கின்றன.இதனால் புழுக்கள் கவரப்பட்டு உண்கின்றன.
  2. கடித்துத் தின்றிடத் தூண்டும் தன்மை : இலைகளில் 0.02% அளவிலுள்ள பீடா – சீட்டோஸ்டிரால் (B -Sitosteral) மற்றும் சில பொருட்களும் கடித்துத் தின்றிடத் தூண்டுபவை குறிப்பாக, இலைகளில் பீடா – சீட்டோஸ்டிரால் எவ்வளவு உள்ளதோ அவ்வளவுக்கு, புழுக்கள் தின்று, கொழுத்து விடும்.
  3. எளிதில் விழுங்கச் செய்யும் தன்மை உடையது.

இவ்விதம் அருமையான சத்துக்களுடைய முசுக்கட்டை இலையை மனித உணவாகவும் சமைத்து உண்ணலாம்.

மரம்

பளுதாங்கும் திறன், வளைந்து கொடுக்கும் திறன் ஆகியவற்றில் தேக்கு மரத்தைவிட மேலானது.

பயிர் முறை

விதையை நாற்று விட்டு, கன்றுகளாக நடலாம். முளை ஒட்டு, கிளை ஒட்டு, பதியன் ஆகியவை மூலம் சிறந்த இரகங்களையும் வளர்க்கலாம். இவை அனைத்திலும், கிளைக் குச்சிகளை நடுவதே எளிய முறையாகும்.