Tag Archives: Bamboo Tree

மூங்கில்(Bamboo Tree)

 

English Name Tamil Name Botanical Name
Bamboo Tree மூங்கில் BOMBOOSA ARUNDINACE

மூங்கிலில் 550 இனங்கள் உள்ளன.
வறண்ட பகுதிகளில் வளரும் கல்மூங்கில் (டெண்ட்ரோ கலாமஸ் ஸ்டிரிக்டஸ்)

ஈரச் செழிப்புள்ள இடங்களில் வளரும் பொந்து மூங்கில்( பம்பூசா அருண்டினேசியா)

KAL MOONKIL 2
கல் மூங்கில்: (DENDROCALAMUS STRICTUS ROXB. NEES).
வறண்ட பகுதிகளில் வளரும்.
6-15 மீட்டர் நீளமும் 2.5-7.5 செ .மீ விட்டமும் உடைய மூங்கில்.
சிறு மூங்கில்களில் நடுவில் வெற்றிடம் இராது. பெரிய மூங்கில்களில் இருக்கும் .
மூங்கில் பட்டை தடித்தது.
பொந்து மூங்கிலின் அளவிற்கு அடர்த்தியாக வளராது.

பொந்து மூங்கில்: (BOMBOOSA ARUNDINACEA )
ஈரச் செழிப்புள்ள இடங்களில் வளரும்.
24-30 மீட்டர் நீளமும் 15-17.5 செ .மீ விட்டமுடைய மூங்கில் .
எல்லா மூங்கில்களிலும் வெற்றிடம் இருக்கும்.
மூங்கில் பட்டையின் தடிப்பு சிறிது குறைவு.
மிகவும் அடர்ந்து வளரும்.
இவற்றைத் தவிர, பொன்னிற மூங்கில், ஒரு அடிவிட்டமுள்ள ராட்சஸ மூங்கில், முளிமூங்கில், கொடிமூங்கில் என பல்வேறு வகையான மூங்கில்களும் உள்ளன.

KAL MOONKIL 3
பொது விவரம்
கல்மூங்கில் வறண்ட மலை சரிவுகளில் காணப்படும்.குறிப்பாகத் தென்னிந்தியக் காடுகளில் மிகவும் அதிகமாக உள்ளது.மழை அதிகமுள்ள இடங்களில் வளருவதில்லை.1050 மீட்டர் உயரப்பகுதி வரை காணப்படுகிறது.
பொந்துமூங்கில் ஈரச் செழிப்புள்ள மேற்கு வங்கம்இ வடகிழக்கு இமயமலைச் சாரல் பகுதிகள் , அஸ்ஸாம், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள், அந்தமான் ஆகிய இடங்களில் வளருகிறது .
அடிப்படையில் மூங்கில் ஒரு புல் வகையாகும். புல்வகைகளைப் போன்றே, இதற்கும் கிழங்கு உள்ளது. விதையும் உண்டு. விதை முளைத்த சில நாட்களிலேயே கிழங்கை உருவாக்கிக் கொண்டுவிடும். பின், இக்கிழங்கிலிருந்து  தூர்கள் போன்று முளைகள் உருவாகி மூங்கிலாக வளரும், முளைகள் ஒவ்வொன்றும் ஒரு உறையால் மூடப்பட்டிருக்கும்.

PONTHU MOONKIL 2
மூங்கிலின் வளர்ச்சி மழைக்காலத்தில் அதிகமாக இருக்கும். குறிப்பாக வறண்ட பகுதிகளில் வளரும் கல்மூங்கில் ஆண்டில் இரண்டே மாதங்களில்தான் வளருகிறது. நாளொன்றுக்கு 5-30 செ.மீ அளவிற்கு உயர்ந்து வளரும்.
பொந்துமூங்கில் ஈரச் செழிப்புள்ள இடங்களில் வளருவதால், மிகவும் உயர்ந்து வளரும். மூங்கிலின் பருமனும் அதிகமாக இருக்கும். மூங்கில் இருவிதமாக பூக்கிறது.விட்டுவிட்டு,  ஒரு காலவரையறையின்றி சில மூங்கில்கள் பூக்கும். இத்தன்மை கல்மூங்கிலில் அதிகமாகக் காணப்படும். சில ஒரேயடியாகப் பூத்து  அதன் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறது.
விட்டுவிட்டுப் பூக்கும் நிலையில், முளைக்கும் திறனுள்ள விதைகள் அதிகமாக உருவாவதில்லை. ஒரேயடியாகப் பூக்கும் நேரங்களில் பெருமளவில் விதைகளை உற்பத்தி செய்து, அதனடியில் பாய்விரித்தது போல் விதையை உதிர்த்திடும்.
கல்மூங்கில் 30-40 வருடங்களுக்கு ஒருமுறையும்  பொந்துமூங்கில் 32-34 வருடங்களுக்கு ஒருமுறையும் ஒரேயடியாகப் பூக்கும். அத்துடன் அதன் ஆயுள் முடிந்து விடும்.
மூங்கிலரிசி
மூங்கில் புதரின் ஆயுள் முடிவடையும்பொழுது,  பூத்து,  விதை உற்பத்தி செய்கிறது. பெருமளவில் ஒவ்வொரு புதரும் விதை உற்பத்தி செய்யும். இந்த மூங்கிலரிச, ஓட்ஸ் தானியத்தைப் போன்றிருக்கும். அதில் நிறைய ஸ்டார்ச்சுப் பொருள் நிறைந்திருக்கும். இந்த மூங்கிலரிசிதான் ஒவ்வொரு பஞ்சத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்களைக் காப்பாற்றியுள்ளது.ஜார்ஜ் வாட் எழுதிய நூலில் 1812ம் ஆண்டு ஒரிசா பஞ்சம், 1864ல் பெல்காம் தார்வார் பகுதிப் பஞ்சம் ஆகியவை நிலவும் சமயம் மூங்கிலரிசியே மக்கள் வாழ உதவியுள்ளது.

seed
இதரப் பயன்கள்
மூங்கில் வேர்கள் சுற்றிலும் படர்ந்து கொண்டு,  மண்ணை வலுவாகப் பற்றிக் கொள்ளும் . அதன் காரணமாக மண் அரிப்பு ஏற்படாமல் காத்திடும் திறனுடையது.
பயிர் முறை ,வளர்ப்பு முறைகள்
மூங்கிலைப் பயிரிட பல வழிமுறைகள் உள்ளன. நாற்று விட்டு நாற்றுகளை எடுத்து நடுவது, மூங்கில் கிழங்கை முளையுடன் வெட்டி எடுத்து நடுவது, கிளைத்த மூங்கிலை கிழங்குடன் வெட்டியெடுத்து நடுவது, என பல முறைகள் உள்ளன.
பொதுவாக ஒரு தூரிலிருந்து எடுத்து நடும் பொழுது, தாய்மரம் எப்பொழுது பூக்கிறதோ அப்பொழுது, இதுவும் பூக்கும். அதன்பின் மடிந்துவிடும். எனவே நாற்றுவிட்டு நாற்றுக்களையெடுத்து நடுவதே நன்று. எனினும் மூங்கில் கிழங்கு மூளைகளை நட்டால், துரிதமாக வளர்ந்திடும். எனவே இதனையும் மேற்கொள்ளலாம். உதாரணமாக துரிதமாக மண் அரிப்பைத் தடுக்க, கிழங்கு முளைகளை நாடுவதே ஏற்றது.
விதை சேகரிப்பும் நாற்று விடுவதும்
மூங்கில் விதைகளுக்கு விதைத்தூக்கம் கிடையாது. உடன் விதைக்கலாம் தரமான விதைகள் கூட 44% அளவில்தான் முளைப்புத்திறன் உடையது. (ஒரேயடியாகப் பூக்கும் சமயத்தில் சேகரித்த விதைகள் மிக அதிக அளவில்முளைப்புத்திறன் உடையவை) விதை சேகரித்த ஒரு மாதத்திற்குள் விதைத்துவிட வேண்டும்.அதற்கு மேல் வைத்திருந்தால் மேலும் முளைப்பு திறன் குறைந்துவிடும்