மகிழ மரம்(Bullet Wood)
English Name | Tamil Name | Botanical Name |
Bullet Wood | மகிழ மரம் | Mimusops Elangi |
நறுமணப் பூக்கள், பந்து போன்ற தழையமைப்பு, பசுமை மாறா நிலை ஆகியவை மூலம் மகிழ்விக்கும் மரமே, மகிழ மரம். மகிழ மரம் ஏப்ரல் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை பூக்கும், எனினும் ஏப்ரலில் அதிகமாகப் பூக்களைக் காணலாம்.
மே மாதத்தில் காய்களும், பழங்களும் உருவாகும். ஆகஸ்ட் – செப்டம்பரில் அதிகமான பழங்கள் இருக்கும்.
பூக்களில் அதிகம், தேன் இருக்கும்.. ஏப்ரல்-மே மாதங்களில் தேனீக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும்.
பயன்கள்
நறுமணம், நல்ல நிழல், அடர்ந்த பந்து போன்ற தழையமைப்பு ,ஆகியவற்றையுடைய அழகு மரமாக எங்கும் காணப்படும்,
பயிர் முறை
மகிழ மரம், எங்கும் வளரக் கூடியது. நகரங்களில் வீட்டு மரமாக வளர்க்க ஏற்றது. அழகு மரமாக இருப்பதுடன், தூசிக் காற்றையும் நன்கு வடிகட்டும். நல்லதொரு குளிர்ச் சூழ்நிலையையும் தோற்றுவிக்கும்.பெரிய கட்டிட வளாகங்களில், வரிசையில் நட்டால் மிகவும் அழகாக இருக்கும்.