Tag Archives: Moringa Oleifera Lamk

முருங்கை மரம்(Drumstick tree)

English Name Tamil Name Botanical Name
Drumstick tree முருங்கை மரம் Moringa Oleifera Lamk

bird attractive trees

இந்தியா முழுவதிலும் வளரும் மரமாகும். எனினும் தென்னிந்தியாவில் அதிகமாக பயிரிட்டு வளர்க்கபடுகிறது. முருங்கை ஒரு சிறு மரம். 5-15 மீட்டர் உயரம் வளருகிறது. பிப்ரவரி மாதத்திற்குமேல் ரகத்தைப் பொறுத்து நீண்ட நாட்கள் பூக்கும். பூங்கொத்திக்களில், வெண்மை நிறப் பூக்களும் மொட்டுக்களும் அடர்ந்திருக்கும். பூக்கள் சிறிது நறுமணமுடையவை. இந்த பூக்களை நாடி பறவைகள் வரும். நீளமான காய்களுடைய ஜாப்னா [Jaffna] இரகம் பலராலும் மிகவும் விரும்பப்டும் இராகமாகும். இது கரிசல் பகுதியில் கூட வளரும். நீளமான காய்களுடைய மற்றொரு இரகம் சாவகசேரி. செம்முருங்கை ஆண்டு முழுவதும் காய்கும். ஆனால் சுமாரான நீளமுடையது. நெல்லை மாவட்ட பால்முருங்கை, அதிகச சதைபற்றுள்ளது. சுமாரான நீளமுடையது. கொடிக்காலில் வளரும், கொடிக்கால் முருங்கை 15 செ.மீ நீளமுடைய சிறு ரகம். முகவை மாவட்ட ஏர்வாடி ரகம் அதிக சதைப்பற்றுடன் 30 செ.மீ நீளமுடையது.
கரூர் பகுதியில் மானாவாரி சரளைப் பகுதியில் வளரும் இரகம் ருசிமிக்கது. ஆத்தூர் முருங்கை ருசிமிக்கது. கே.எம். 1 என்ற குடுமியான் மலையில் ஒரு சில மரங்கள் 4-5 அடி நிளமுள்ள முருங்கைக் கா ய்களைக் காய்க்கிறது.

பயன்கள்:

இலையில் நிறைய கால்சியமும், புரதமும் உள்ளது. அரிசி சோறு உண்பவர்களுக்கு, முருங்கைத் தழை ஏற்ற கீரையாகும். அரிசியில் இல்லாச் சத்துக்களை முருங்கைக் கீரை ஈடு செய்து விடும் மற்றும் நினைத்த சமயம் கீரையைப் பறித்து சமையல் செய்திடலாம். அதன் காரணமாகவே, “ஒரு முருங்கையும் ஒரு எருமையும் உண்டானால், வருகிற விருந்துக்கு மனம் களிக்க செய்வேன்.” என்ற பழமொழி கூறப்படுகிறது. கறவை மாடுகளில் இத்தழை நன்கு பாலூறப் செய்யும்.

மரம்:

வலுவ்வில்லாதது, காகிதக் குழம்பு தயாரிக்க உபயோகிக்கலாம். ஒரு சில இடங்களில், தீக்குச்சிகளும் தயாரிக்கின்றனர்.

இலை:

வைட்டமின் ‘சி’ பற்றாக் குறையால் ஏற்படும் ‘ஸ்கர்வி’ நோய்க்கு இலை சிறந்த மருந்தாகும்.

பயிர் முறை:

முருங்கை மரத்தை தமிழகத்தில் எங்கும் பயிரிடலாம்.