மஞ்சக் கடம்பு(Haldu)
English Name | Tamil Name | Botanical Name |
Haldu | மஞ்சக் கடம்பு | Haldinia gordifolia |
மஞ்சக் கடம்பு, பிற மரங்களுடன் கலந்து வளரும் ,இது தனித்த காடாக உருவாவதில்லை. தமிழ்நாட்டில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்திலிருந்து, 1200 மீட்டர் உயரம் வரை இம்மரம் வளரும்.
மஞ்சக் கடம்பு ஒரு பெரிய இலையுதிர் மரம். 20-30 மீட்டர் உயரம் வளரும். அடிமரம் 4.8 மீட்டர் சுற்றளவுடன் காணப்படும். மே- மாதத்திலிருந்து ஆகஸ்ட் வரை பூக்கும். இப்பூக்கள் மஞ்சள் நிறமுடையவை. பூக்கள் ஒவ்வொன்றும் 4 மில்லி மீட்டர் அளவுள்ள நெற்றுக்களாக மாறும். இந்த சிறிய நெற்றுக்கள் முற்றி, கருமை நிறம் பெற்று,உதிர்ந்து விடும்.இந்த சிறிய நெற்றுகளில் நுண்ணிய விதைகள் பல இருக்கும்.
மரம்
சிற்பம் செய்வதற்கு ஏற்றது. அமிலத்தால் அவ்வளவாக அரிக்கப்படாததால் பாட்டரிகளில் தடுப்புப் பலகையாகவும் பயன்படுத்தலாம்.
பயிர் முறை
இயற்கையில் மஞ்சக் கடம்பு, தானாகவே பரவுவதில்லை. சிதறி விழும் விதை சரிவர முளைப்பதில்லை.மஞ்சக் கடம்பைப் பயிரிட,, விதையை நாற்றுவிட்டு,மரகன்றுகளை உருவாக்கி நடுவதே சிறந்தது.