Monthly Archives: May 2018

மோதகவல்லி (Modhagavalli)

ENGLISH NAME : Modhagavalli

TAMIL NAME : மோதகவல்லி (கொழுக்கட்டை மரம் ஆனைத் தொண்டி)

Scientific Name : டெரிகோடா அலாடா (Pterygota alata R.Br.Syn.Srerculia alata).
பொது விவரம்
கிழக்கு இமயமலைப் பகுதி, அஸ்ஸாம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையில் வட கன்னடத்திலிருந்து தெற்குப் பகுதி எல்லாம் காணப்படுகிறது. அந்தமான் தீவிலும் உள்ளது. பசுமை மாறாக் காடுகளில் காணப்பட்டாலும். வறண்ட பகுதிகளிலும் வளரக் கூடியது.
மோதகவல்லி மரம் ஓங்கி உயர்ந்து வளரும் மரமாகும். 3 மீட்டர் சுற்றளவுடன் 45 மீட்டர் உயரத்தையும் எட்டிவிடும். அந்நிலையில் உருண்டு தடித்த மரப்பகுதி 30 மீட்டர் உயரம் வரை இருக்கும். அடிமரத்தின் சிறிது உயரத்திலிருந்தே நீள வாட்டத்தில்- கிடை மட்டத்தில் தழையமைப்பை உருவாக்கிக் கொண்டு வளர்ந்திடும். இதன் காரணமாகஇ சாலையில் வளர்க்க விரும்பப்படுகிறது.
கிளைகளின் நுனிகளில்இ இலைகள் அடர்ந்திருக்கும். இலை ஒவ்வொன்றும் 10-25 செ.மீ நீளமும்இ 7-20 செ.மீ அகலமும் கொண்டு நீண்ட வட்டத்தில் இருதய வடிவமைப்புடன் இருக்கும். இலையுதிர்க்கும் தன்மையுடையது.
மார்ச் மாதத்தில் பூக்கள் தோன்றிடும். கிளைகளில் உதிர்ந்த இலைக் காம்பு வடுக்களின் அருகே பூங்கதிர்கள் உருவாகும். ஆண்இ பெண் பூக்கள் தனித் தனியானவை சிறிய காம்புகளுடைய பூங்கதிர்களில் 2.5 செ.மீ விட்டமுள்ள பழுப்பு மஞ்சள்நிறப் பூக்கள் மலர்ந்திடும்.
இதனை அடுத்துஇ பெரிய கடினமான தோடுடைய கொட்டைகளைப் போன்றுஇ 12-15 செ.மீ அளவில் ஒரு அளவிற்கு உருண்டையான காய்கள் உருவாகும். இதனுள் 5 செ-மீ நீளமுள்ள தட்டையான விதைகள் பெரிய இறக்கையுடன் இருக்கும். ஒரு காயில் சுமார் 40 விதைகள் இருக்கும்.

1
மரம்
மோதகவல்லி மரத்தை எளிதிலே அறுத்துஇ வேலை செய்திடலாம். ஆனால் பூச்சி, பூசுணங்கள் எளிதில் பாதிக்கும். விறகு நன்கு எரியும். வெப்பத்திறன் 5160 கலோரிகள்.
பிற பயன்கள்
சாலை ஓரங்களுக்கு மிகவும் உகந்த மரம்.
பயிர் முறை
ஈர செழிப்புச் சூழ்நிலையை விரும்பும் மரமாயினும், ஒரு அளவிற்கு வறட்சியையும் தாங்கிடும். வறட்சியில் இலையுதிர்த்திடும் தன்மை காரணமாக, நிலைத்திடும். பெரிய மரமாக வளரும் ஆற்றலுடைய மரம். எனவே சாலை ஓரங்கள், குளம் மற்றும் கால்வாய்க் கரைகள், மண் அரிமானம் ஏற்படும் ஆற்றுக் கரைகள் ஆகிய இடங்களில் எல்லாம் நட்டு வளர்க்கலாம். ஆண்டிற்கு 1000 மில்லி மழையளவிற்கு மேல் உள்ள இடங்களில் எல்லாம் இந்த அருமையான மரத்தை வளர்க்கலாம். பூங்காக்களிலும் இது இடம் பெறுவது அவசியம்.

3 2
மோதகவல்லி மரத்தை வளர்க்க, விதையை நேரடியாக விதைக்கலாம், அல்லது நாற்றுவிட்டு நாற்றுக்களையும் நடலாம். நாற்றுக் குச்சிகளும் நன்கு வளர்ந்திடும். முற்றிய காயிலிருந்து எடுத்த விதையை உடன் விதைக்க வேண்டும். நாற்றுவிட்டால், 20 செ-மீ உயர நாற்றுக்களை எடுத்து நடுவது நல்லது. ஆரம்பத்தில் 2 – 2 மீ இடைவெளியில் நட்டு, அடர்ந்ததும் ஊடுவரிசை மரங்களை எடுத்திடலாம். இதனால் மரம் ஓங்கி வளர்ந்திடும்.

மூங்கில்(Bamboo Tree)

 

English Name Tamil Name Botanical Name
Bamboo Tree மூங்கில் BOMBOOSA ARUNDINACE

மூங்கிலில் 550 இனங்கள் உள்ளன.
வறண்ட பகுதிகளில் வளரும் கல்மூங்கில் (டெண்ட்ரோ கலாமஸ் ஸ்டிரிக்டஸ்)

ஈரச் செழிப்புள்ள இடங்களில் வளரும் பொந்து மூங்கில்( பம்பூசா அருண்டினேசியா)

KAL MOONKIL 2
கல் மூங்கில்: (DENDROCALAMUS STRICTUS ROXB. NEES).
வறண்ட பகுதிகளில் வளரும்.
6-15 மீட்டர் நீளமும் 2.5-7.5 செ .மீ விட்டமும் உடைய மூங்கில்.
சிறு மூங்கில்களில் நடுவில் வெற்றிடம் இராது. பெரிய மூங்கில்களில் இருக்கும் .
மூங்கில் பட்டை தடித்தது.
பொந்து மூங்கிலின் அளவிற்கு அடர்த்தியாக வளராது.

பொந்து மூங்கில்: (BOMBOOSA ARUNDINACEA )
ஈரச் செழிப்புள்ள இடங்களில் வளரும்.
24-30 மீட்டர் நீளமும் 15-17.5 செ .மீ விட்டமுடைய மூங்கில் .
எல்லா மூங்கில்களிலும் வெற்றிடம் இருக்கும்.
மூங்கில் பட்டையின் தடிப்பு சிறிது குறைவு.
மிகவும் அடர்ந்து வளரும்.
இவற்றைத் தவிர, பொன்னிற மூங்கில், ஒரு அடிவிட்டமுள்ள ராட்சஸ மூங்கில், முளிமூங்கில், கொடிமூங்கில் என பல்வேறு வகையான மூங்கில்களும் உள்ளன.

KAL MOONKIL 3
பொது விவரம்
கல்மூங்கில் வறண்ட மலை சரிவுகளில் காணப்படும்.குறிப்பாகத் தென்னிந்தியக் காடுகளில் மிகவும் அதிகமாக உள்ளது.மழை அதிகமுள்ள இடங்களில் வளருவதில்லை.1050 மீட்டர் உயரப்பகுதி வரை காணப்படுகிறது.
பொந்துமூங்கில் ஈரச் செழிப்புள்ள மேற்கு வங்கம்இ வடகிழக்கு இமயமலைச் சாரல் பகுதிகள் , அஸ்ஸாம், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள், அந்தமான் ஆகிய இடங்களில் வளருகிறது .
அடிப்படையில் மூங்கில் ஒரு புல் வகையாகும். புல்வகைகளைப் போன்றே, இதற்கும் கிழங்கு உள்ளது. விதையும் உண்டு. விதை முளைத்த சில நாட்களிலேயே கிழங்கை உருவாக்கிக் கொண்டுவிடும். பின், இக்கிழங்கிலிருந்து  தூர்கள் போன்று முளைகள் உருவாகி மூங்கிலாக வளரும், முளைகள் ஒவ்வொன்றும் ஒரு உறையால் மூடப்பட்டிருக்கும்.

PONTHU MOONKIL 2
மூங்கிலின் வளர்ச்சி மழைக்காலத்தில் அதிகமாக இருக்கும். குறிப்பாக வறண்ட பகுதிகளில் வளரும் கல்மூங்கில் ஆண்டில் இரண்டே மாதங்களில்தான் வளருகிறது. நாளொன்றுக்கு 5-30 செ.மீ அளவிற்கு உயர்ந்து வளரும்.
பொந்துமூங்கில் ஈரச் செழிப்புள்ள இடங்களில் வளருவதால், மிகவும் உயர்ந்து வளரும். மூங்கிலின் பருமனும் அதிகமாக இருக்கும். மூங்கில் இருவிதமாக பூக்கிறது.விட்டுவிட்டு,  ஒரு காலவரையறையின்றி சில மூங்கில்கள் பூக்கும். இத்தன்மை கல்மூங்கிலில் அதிகமாகக் காணப்படும். சில ஒரேயடியாகப் பூத்து  அதன் வாழ்க்கையை முடித்துக் கொள்கிறது.
விட்டுவிட்டுப் பூக்கும் நிலையில், முளைக்கும் திறனுள்ள விதைகள் அதிகமாக உருவாவதில்லை. ஒரேயடியாகப் பூக்கும் நேரங்களில் பெருமளவில் விதைகளை உற்பத்தி செய்து, அதனடியில் பாய்விரித்தது போல் விதையை உதிர்த்திடும்.
கல்மூங்கில் 30-40 வருடங்களுக்கு ஒருமுறையும்  பொந்துமூங்கில் 32-34 வருடங்களுக்கு ஒருமுறையும் ஒரேயடியாகப் பூக்கும். அத்துடன் அதன் ஆயுள் முடிந்து விடும்.
மூங்கிலரிசி
மூங்கில் புதரின் ஆயுள் முடிவடையும்பொழுது,  பூத்து,  விதை உற்பத்தி செய்கிறது. பெருமளவில் ஒவ்வொரு புதரும் விதை உற்பத்தி செய்யும். இந்த மூங்கிலரிச, ஓட்ஸ் தானியத்தைப் போன்றிருக்கும். அதில் நிறைய ஸ்டார்ச்சுப் பொருள் நிறைந்திருக்கும். இந்த மூங்கிலரிசிதான் ஒவ்வொரு பஞ்சத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்களைக் காப்பாற்றியுள்ளது.ஜார்ஜ் வாட் எழுதிய நூலில் 1812ம் ஆண்டு ஒரிசா பஞ்சம், 1864ல் பெல்காம் தார்வார் பகுதிப் பஞ்சம் ஆகியவை நிலவும் சமயம் மூங்கிலரிசியே மக்கள் வாழ உதவியுள்ளது.

seed
இதரப் பயன்கள்
மூங்கில் வேர்கள் சுற்றிலும் படர்ந்து கொண்டு,  மண்ணை வலுவாகப் பற்றிக் கொள்ளும் . அதன் காரணமாக மண் அரிப்பு ஏற்படாமல் காத்திடும் திறனுடையது.
பயிர் முறை ,வளர்ப்பு முறைகள்
மூங்கிலைப் பயிரிட பல வழிமுறைகள் உள்ளன. நாற்று விட்டு நாற்றுகளை எடுத்து நடுவது, மூங்கில் கிழங்கை முளையுடன் வெட்டி எடுத்து நடுவது, கிளைத்த மூங்கிலை கிழங்குடன் வெட்டியெடுத்து நடுவது, என பல முறைகள் உள்ளன.
பொதுவாக ஒரு தூரிலிருந்து எடுத்து நடும் பொழுது, தாய்மரம் எப்பொழுது பூக்கிறதோ அப்பொழுது, இதுவும் பூக்கும். அதன்பின் மடிந்துவிடும். எனவே நாற்றுவிட்டு நாற்றுக்களையெடுத்து நடுவதே நன்று. எனினும் மூங்கில் கிழங்கு மூளைகளை நட்டால், துரிதமாக வளர்ந்திடும். எனவே இதனையும் மேற்கொள்ளலாம். உதாரணமாக துரிதமாக மண் அரிப்பைத் தடுக்க, கிழங்கு முளைகளை நாடுவதே ஏற்றது.
விதை சேகரிப்பும் நாற்று விடுவதும்
மூங்கில் விதைகளுக்கு விதைத்தூக்கம் கிடையாது. உடன் விதைக்கலாம் தரமான விதைகள் கூட 44% அளவில்தான் முளைப்புத்திறன் உடையது. (ஒரேயடியாகப் பூக்கும் சமயத்தில் சேகரித்த விதைகள் மிக அதிக அளவில்முளைப்புத்திறன் உடையவை) விதை சேகரித்த ஒரு மாதத்திற்குள் விதைத்துவிட வேண்டும்.அதற்கு மேல் வைத்திருந்தால் மேலும் முளைப்பு திறன் குறைந்துவிடும்

முள்ளு வேங்கை (Asna)

English Name Tamil Name Botanical Name
Asna முள்ளு வேங்கை Bridelia Vetrusa Spreng

பொது விவரம்

மேற்குத் தொடர்ச்சி மலை காடுகளின் பள்ளத்தாக்குப் பகுதிகளிலும், ஓடைக்  கரைகளிலும் உள்ளன. முள்ளு வேங்கை சுமாரான உயரமுடைய மரம். 10 மீட்டர் உயரம் செங்குத்தாக வளர்ந்து 1.80- 2.10 மீட்டர் சுற்றளவுள்ள உருளை வடிவ அடிமரத்தைக் கொண்டிருக்கும். சிறு மரங்கள் மற்றும் கிளைகளில் முட்கள் இருக்கும். மரப்பட்டை கருப்பு நிறமுடையது.

முள்ளு வேங்கை  இலையுதிர்க்கும் மரமாகும். கோடையில் இலைஉதிர்த்து, மழை பெய்தவுடன் பழுப்புச் செம்மை நிறத் துளிர்களை உருவாக்கி, பார்ப்பதற்கு மிகவும் அழகாகக் காட்சியளிக்கும். இளம் கிளைகளும் இலைகளின் பின் புறமும் நுண்ணிய பொடி தூவியது போன்றிருக்கும்.

2

மே-ஜூலை மாதங்களில் பூக்கும். ஒருபால் பூக்களும், இரு பால் பூக்களும் கலந்திருக்கும். இப்பூக்கள் மஞ்சள் நிறமுடையவை.

சிறிய உருண்டையான காய்கள் உருவாகிக் கனியும். 0.75 செ.மீ நீளமுள்ள இக்கனிகள் நீலக் கருமை நிறமுடையவை. அதிலுள்ள சதைக் குழம்பில் பல விதைகள் இருக்கும். கனியை உண்ணலாம், சிறிது இனிப்புடையது, பறவைகள், குறிப்பாகப் பச்சைப் புறாக்கள் கனிகளை உண்டு, விதைகளை சிதறிவிடும்.

மரம்

கடைசல் வேலைகளுக்கும் உகந்தது. இதனைக் காசமரம் எனக் கூறுவர். கட்டிட வேலைகளுக்கான சாமான்கள்,  வண்டிச் சாமான்கள், பலகைகள்,  செய்திட ஏற்ற மரம். இதனை தேக்கிற்கு அடுத்தபடியான இரண்டாம் தர மரம் எனக் கூறுவர். சிற்பமும் செதுக்கலாம். நீரில் மூழ்கிய நிலையில் வலு அதிகரிப்பதால், கிணற்று வேலைகளுக்கும் மிக ஏற்றது.

3

பயிர் முறை

முள்ளு வேங்கையை  மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் நட ஏற்றது. சமவெளிகளில் ஆண்டிற்கு 1000 மில்லியளவு மழை கிடைக்கும் இடங்களிலும் நடலாம். நகரங்களிலும் நடலாம் . பெரிய கட்டிடவளாகங்களில் மூலைப் பகுதிகளில் நட்டு வளர்த்தால், இலையுதிர்த்த பின் துளிர்க்கும் சமயம் அழகு மரமாகக் காட்சியளிக்கும்.

முள்ளு வேங்கையைப் பயிரிடஇ விதையை நாற்றுவிட்டு கன்றுகளை நட வேண்டும். இதற்கு பழுத்த கனிகளைச் சேகரித்துஇ நீரிலேயே பிசைந்து, கழுவி, விதையைத் தனித்தெடுத்து, உலர்த்தி வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு கிலோ எடையில் 10,000- 17,000 விதைகள் இருக்கும். நாட்பட வைத்திருக்க இயலாது. முளைப்புத் திறன் குறைந்துவிடும். எனவே விதை எடுத்ததும்  நற்று விட வேண்டும். நாற்றுக்கள் 50 செ.மீ வளர்ச்சி பெற்றதும் 3 மீட்டர் இடைவெளியில் நடலாம். நிதானமாக வளரும் இயல்பு உடையது.

வக்கணி(Mountain parsimon)

English Name Tamil Name Botanical Name
Mountain parsimon வக்கணி Diospyros Montana roxb

பொது விவரம்

இந்தியா முழுவதும் சிறு எண்ணிக்கையில் காணப்படும் மரம். குறிப்பாக இலையுதிர்க் காடுகளில் அதிகமாகப் பார்க்கலாம். தமிழகத்தில் மலை அடிவாரத்திலிருந்து 1200 மீட்டர் உயரப் பகுதி வரை உள்ளது.

சாதாரணமாக சமவெளிகளிலும் மலை அடிவாரத்தில் 5 மீட்டர் உயரத்தில் காணப்படுகிறது. ஆனால் 20 மீட்டர் உயரம் வரை வளரும். இலையுதிர்க்கும் மரம் மார்ச் மாதத்தில் புதுத் தளிர்களைக் காணலாம்

1

மார்ச்ஏப்ரல் மாதங்களில் பூக்கும். ஆண் பூக்கள் பூங்கொத்துகளில் இருக்கும். பெண் பூக்கள் தனித் தனியாக இருக்கும். இவை பச்சை கலந்த  மஞ்சள் நிறமுடையவை.

இதன்பின்இ மரத்தில் கனிகள் உருவாகும். 1-5- 2.0 செ.மீ அளவுடைய இக்கனிகள் உருண்டையாக சற்று கூம்பு வடிவத்துடன் இருக்கும். ஆரம்பத்தில் பச்சை நிறக் காய்களாக வளர்ந்து கனியும் பொழுதுஇ ஆரஞ்சு நிறக் கனிகளாக மாறும். அக்டோபர் மாதத்தில் இக்கனிகளைக் காணலாம். பூவின் புற இதழ்கள் கனியின் முனையில் இணைந்திருக்கும் கனியினுள் 3-6 கருப்பு விதைகள் இருக்கும்.

கனி

கசப்புடையது. உண்பதில்லை. நீர் நிலைகளில் மீன்களை  மயக்கமடையச் செய்யஇ கனிகளையும் இலைகளையும் இடித்து பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. 2

மரம் மேஜை நாற்காலிகள் செய்யவும்இ கூரைச் சட்டங்கள் தயாரிக்கவும்இ வேளாண் கருவிகள் செய்யவும் ஏற்றது. சிற்பங்கள் செதுக்குவதற்கும் ஏற்றது. வக்கணிஇ நல்லதொரு எரிபொருள் என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன் வெப்பத்திறன் 5125 கலோரிகள்.

பயிர் முறை

கனிகளிலிருந்துஇ விதையெடுத்துஇ நாற்றுக்களை நட வேண்டும். நாற்றங்காலில் 30 செ.மீ உயரம் வளர்ந்ததும் எடுத்து நடலாம். நடவு இடைவெளி 3-4.5 மீட்டர்.

மஞ்சக் கடம்பு(Haldu)

 

English Name Tamil Name Botanical Name
Haldu மஞ்சக் கடம்பு Haldinia gordifolia

மஞ்சக் கடம்பு, பிற மரங்களுடன் கலந்து வளரும் ,இது தனித்த காடாக உருவாவதில்லை. தமிழ்நாட்டில், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்திலிருந்து, 1200 மீட்டர் உயரம் வரை  இம்மரம் வளரும்.

2.Haldinia

மஞ்சக் கடம்பு ஒரு பெரிய இலையுதிர் மரம். 20-30 மீட்டர் உயரம் வளரும். அடிமரம் 4.8 மீட்டர் சுற்றளவுடன் காணப்படும். மே- மாதத்திலிருந்து ஆகஸ்ட் வரை பூக்கும். இப்பூக்கள் மஞ்சள் நிறமுடையவை. பூக்கள் ஒவ்வொன்றும்       4 மில்லி மீட்டர் அளவுள்ள நெற்றுக்களாக  மாறும். இந்த சிறிய நெற்றுக்கள் முற்றி, கருமை நிறம் பெற்று,உதிர்ந்து விடும்.இந்த சிறிய நெற்றுகளில்  நுண்ணிய விதைகள் பல இருக்கும்.

3.Haldinia

மரம்

சிற்பம் செய்வதற்கு ஏற்றது. அமிலத்தால் அவ்வளவாக அரிக்கப்படாததால் பாட்டரிகளில் தடுப்புப் பலகையாகவும் பயன்படுத்தலாம்.

1.Haldinia

பயிர் முறை

இயற்கையில் மஞ்சக் கடம்பு, தானாகவே பரவுவதில்லை. சிதறி விழும் விதை சரிவர முளைப்பதில்லை.மஞ்சக் கடம்பைப் பயிரிட,, விதையை நாற்றுவிட்டு,மரகன்றுகளை  உருவாக்கி  நடுவதே சிறந்தது.

சீதாப் பழம்(Custard Apple)

English Name Tamil Name Botanical Name
Custard  Apple சீதாப் பழம் Annona Squamosa

தாவரக் குடும்பம்  : அன்னோனேசி.  இராமாயண   பெயர்கள்,  இப்பழ  வகைகளுக்கு  வழங்கப்படுகின்றன . சீதாப்  பழம்  சீதையையும்,  ராம்சீதா  இராமனையும்,  லக்ஷ்மண்  பால் (செரிமேலா பழம்) என்பது  லக்ஷ்மணனையும்   குறிக்கும் .

2

சீதாப்பழ  மரம்  5-6  மீட்டர்  உயரம்  வளரும் . குறுமரமாகக்  காட்சிதரும். இலைகள்  சிறிது பளபளப்பாக,  இருக்கும்  மார்ச்- ஏப்ரலில்  பூக்கும், பூக்கள் வெளிர்  பச்சை  நிறத்தில்   இருக்கும். இதன்பின்,   வெளிர் பச்சை  நிறத்தில், திரள்  கனியாக  காய்கள்  உருவாகும்.  பல செதில்கள்  இணைந்த  உருண்டையான  கனி  பூத்ததிலிருந்து  பழமாக  மாற  நான்கு  மாதங்கள்  ஆகும். மரம்  ஒன்று  20  கனிகள் கொடுக்கும். சதைப்  பற்றுள்ள  கனியில், விதைகள்  அதிக  இடத்தை ஆக்கிரமித்திருக்கும்.  இனிப்புச் சதை.

தழை :

ஆடு,  மாடுகள்  உண்பதில்லை. இலையிலும்  பூச்சிக்  கொல்லிச்  சத்து உள்ளது. இலையின்  மேலாகவுள்ள  மெழுகிலும்  கூட,  புழுக்களைக் கட்டுப்படுத்தும்  ஸேஸ்குயிடர்பீன் (Sesquiterpene ) சத்து  உள்ளது.

மரம்

ஐந்து  சதுர  மீட்டர்  பரப்பில்  வளர்ந்திருக்கும்  ஒரு  மரத்தைக்  கொண்டே, ஒரு  எக்டேர்  பரப்பிலுள்ள பயிரைக்   காத்திடலாம்.  வாகனங்கள்  உமிழும்  புகையிலுள்ள  ஈயத் தூசியை,  சீதா  மரத்  தழைப்  பகுதி  மிகவும்  சிறப்பாக  வடிகட்டும்.

1

பயிர்முறை

சீதா  மரம்  வறண்ட  செம்மண்  மற்றும்  சமவெளி  நிலங்களில் மானாவாரியாகப்  பயிரிடக்கூடியது.  பாறைப்  பகுதியில், குறிப்பாக உருளைக்கற்கள்  நிறைந்த  இடங்களில் கூட,  வளர்ந்திடும்.  ஓட்டுக்கட்டப்பட்ட கன்றுகள்  நட்ட  மூன்று  வருடங்களில்  காய்க்கத் துவங்கி  விடும்.  ஓட்டுக்கட்டாத  கன்றுகள்  காய்ப்பதற்கு      5  ஆண்டுகளுக்கு மேல்  ஆகும். பறவைகள்  இப்பழத்தை  விரும்பி  உண்ணும்.    ஈழத் தமிழரால் இப்பழத்தை அன்னமுன்னா பழம் என்றும் அழைக்கப்படுகின்றது.

 

செம்மரம்(Red sandalwood)

English Name Tamil Name Botanical Name
Red sandalwood செம்மரம் Pterocarpus santalinus


Pterocarpus_santalinus_in_Talakona_forest,_AP_W_IMG_8099

தாவரக் குடும்பம் : மிலியேசி.

செம்மரம்  ஓங்கி  உயர்ந்து  கம்பீரமாகக்  காட்சியளிக்கும் 2  மீட்டர் சுற்றளவுள்ள   அடிமரத்துடன், 15 மீட்டர்  உயரம்  செங்குத்தாக  வளர்ந்து   இருக்கும். செப்டம்பர்- அக்டோபர்  மாதங்களில் பூக்கும்.

மரம்

வெட்டியதும்,  மரம்  சிவப்பாக  இருக்கும்,  அதன்  காரணமாகவே, செம்மரம் என்ற  பெயர்  ஏற்பட்டுள்ளது .

பயிர் முறை

அதிக  ஈரச்  சூழ்நிலையும்  வடிகால்  வசதியும்  உள்ள  இடங்களில்  வளரும்.

Pterocarpus_santalinus_04

 

வன்னி மரம்(KEJARI )

English Name Tamil Name Botanical Name
KEJARI வன்னி மரம் PROSOPIS CINERARIA

பொது விவரம்
ஆண்டுக்கு 500 மி.மீக்கு குறைவாக மழையுள்ள இடங்களில் நன்கு வளரும் தன்மை உடையது. சில இடங்களில் கரிசல் மண்ணிலும் காணப்படுகிறது. இது வறண்ட, பாலைப்பகுதி மரமாகும், இருப்பினும் பசுமை மாறாமலிருக்கும்.
வன்னி மரம் சுமாரான உயரமுடைய மரம் 0.9 மீட்டர் விட்டமுடைய அடிமரத்துடன் 6-9 மீட்டர் உயரம் வளரக்கூடியது. ஓரளவிற்குச் செங்குத்தாக வளர்ந்து, அதற்கு மேல் நிறைய கிளைகளை உருவாக்கிக் கொள்ளும். இலைகள் இரட்டைக் கூட்டிலை அமைப்புடையது. மழைக்காலத்திற்குப் பின், சிறு மஞ்சள் நிறப் பூங்கொத்துக்கள் உருவாகும். இவை சிறிது நறுமணமுடையவை.
ஏப்ரல்- ஜூன் மாதங்களில் காய்க்கும். இவை பின்னர், சிறிது உருளை வடிவ நெற்றுக்களாக மாறும்.

2

பயன்கள்
பாலைவனப் பகுதிக்கு உயிர் கொடுப்பது, வன்னி மரங்களே. பாலைப்பகுதி மக்களுக்கு வன்னியும் ஆடும், ஒட்டகமும் வாழ்வளிக்கின்றது. தழை உற்பத்தி செய்வதில், வன்னியின் திறன் அபாரமானது. மரத்தினடியில் பிற புற்பூண்டுகளுடன் போட்டியிடாமல், ஆழ்தள நீரைக் கொண்டே வளர்ந்திடும்.
இதரப் பயன்கள்
தேரி மணல் பகுதிகளில் வளர்க்க ஏற்ற மரமாகும். மணல் காற்றின் அரிப்பை தடுத்துவிடும்.
பயிர் முறை
தமிழகத்தில் எங்கும் வளர்க்கலாம். கிராமங்களில் தரிசு நிலங்களைப் பயனாக்கிட மிகவும் ஏற்றது. வன்னி மிகவும் நிதானமாக வளரும் மரமாகும்.
வன்னியைப் பயிரிட, நேரடியாக விதையை விதைக்கலாம், அல்லது விதையை நாற்றுவிட்டு, கன்றுகளை நடலாம். முற்றிய நெற்றுக்களைப் பறித்து, வெயிலில் நன்கு உலர்த்தி, விதையைப் பிரித்தெடுக்க வேண்டும். ஒரு கிராம் எடையில், 25-27 விதைகள் இருக்கும். நீண்ட காலம் விதையைச் சேமித்து வைக்கலாம். பல வருடங்கள் வரை, விதை உயிர்ப்புடன் இருக்கும்.
விதையின் முளைப்பைத் துரிதப்படுத்த பல வழிமுறைகள் உள்ளன. விதையை 24 மணி நேரம் நீரில் ஊறவைத்தல். சாண உருண்டைகளில் விதையைப் பொதிந்து உலர்த்தி, பின் விதைப்பதால் முளைப்பு துரிதப்படுவதுடன் கூட,  நூற்றுக்களும் நன்கு வளரும் .

3
வன்னியைப் பற்றிய சில சரித்திர சம்பவங்கள்
கி.பி 1451ம் ஆண்டில் இராஜஸ்தான் பிப்சார் என்ற கிராமத்தில் ஒரு குழந்தை பிறந்தது. ஜாம்பாஜி என்ற இக்குழந்தை, இருபத்தைந்தாவது வயதை அடைந்த சமயம், அங்கு மழை பொய்த்தது. பஞ்சம் தலை தூக்கியது. முதல் வருடம், மாடுகளைக் காப்பாற்ற கம்பந்தட்டை கை கொடுத்தது. அடுத்த வருடமும் பஞ்சம் நீடித்தது. மரத் தழைகளை எல்லாம் வெட்டி தீவனமாகக் கொடுத்தனர். அப்படியும் பஞ்சம் முடியவில்லை. எட்டு ஆண்டுகள் பஞ்சம். மரங்கள் மறைந்தன.தானிய இருப்பும் கரைந்தது. முடிவில் மக்கள் வன்னி மர நெற்றுக்களையும் இலந்தைக் கொட்டைகளையும் மாவாக்கி உண்டனர் . அதன்பின் வேறு வழியின்றி, பசுமையைத் தேடி புறப்பட்டனர். வழியிலே மாடுகள் மாண்டன. மனிதர்களில் பலர் மடிந்தனர். எஞ்சியவர்களில் ஒருவன் ஜாம்பாஜி. பஞ்சத்தின் கோரம் ஜாம்பாஜியை உலுக்கிவிட்டது. பஞ்சத்தின் அடிப்படைக் காரணத்தை உணர்ந்தான். மனிதன்-மரம் -மிருகம் ஆகிய மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை. இந்த இணைப்புக் கோபுரத்தின் அடித்தளம் மரமே எனக் கண்டான். அவனுடைய 34 வது வயதில், இலந்தையும் வன்னியும் அடர்ந்த காட்டிலே, மனிதனும் மிருகங்களும் செழித்துக் கொழித்து உலாவி வரும் காட்சியைக் கண்டான். பாலைவனச் சூழ்நிலையில், மனித இனம் வாழ வேண்டுமானால், இயற்கையுடன், இணைந்து வாழவேண்டுமேயன்றிஇ, சுரண்டி வாழலாகாது எனத் தீர்மானித்தார். கி.பி1495ல், இருபத்துஒன்பது அறிவுரைகள் கொண்ட சித்தாந்தத்தை உருவாக்கினான். மக்களிடையே அவற்றைப் போதித்தான். அந்த 29 அறிவுரைகளிலே ஒன்று மரத்தை வெட்டாதே, மிருகங்களைக் கொல்லாதே என்பவையும் அடங்கும். இந்த சித்தாந்தத்தை ஏற்று நடப்பவர்கள் எல்லாம் பிஷ்ணாய்கள் (29 அம்சத்தினர்) என அழைக்கப்பட்டனர். அவர்கள் வாழ்விடங்களில், வன்னியும் இலந்தையும் வளர்க்கப்பட்டு காடுகள் உருவாகின. பஞ்சத்திற்கு விடிவும் தோன்றியது.

1
இரண்டாவது சம்பவம்
ஜாம்பாஜியின் காலத்தில் மார்வார் இராஜ்யத்தில் அஜித் சிங் என்பவர் ஆண்டு வந்தார். மொகலாய அரசர்களுடன் ஓயாமல் சண்டையிட்டு வாழ வேண்டிய சூழ்நிலையில் இருந்தார். அதற்காக கி.பி 1730 ல் மாபெரும் கோட்டை ஒன்றைக் கட்ட ஆரம்பித்தார் இதற்காக பெருமளவில் சுண்ணாம்பு தேவைப்பட்டது. சுண்ணாம்புக் கால்வாய்களுக்கு, அருகில் உள்ள வன்னி மரங்களையெல்லாம் வெட்டினான். கோட்டைக்கு, 16 மைல் தூரத்தில் நூற்றாண்டு காலமாக உருவாக்கிப் பேணி வந்த பிஷ்ணாய்களின் காடுகள் இருந்தன. இக்காடுகளிலிருந்து வன்னி மரங்களை வெட்டிக் கொண்டுவர, அஜித் சிங் ஆணையிட்டான். அப்பாவி பிஷ்ணாய்களுக்கு இது அதிர்ச்சியாக இருந்தது. வாழ்க்கையின் அடித்தளத்தையே இந்த ஆணை தகர்ப்பதாகக் அரசரின் தளபதியிடம் முறையிட்டனர். அழுது புலம்பினர், பலனில்லை. மரத்தை வெட்ட ஒரு படையே வந்து விட்டது.
ராம்கோட் பிஷ்ணாய் என்பவரின் மனைவி அமிருததேவிக்கு ஆவேசம் வந்து விட்டது. தனது மூன்று மகள்களுடன் ஒரு வன்னி மரத்தை அணைத்துக் கொண்டு, ‘எங்களை முதலில் வெட்டிய பின் இந்த வன்னியை வெட்டு’ எனக் கதறினாள். படை செயலில் இறங்கியது. நான்கு தலைகளும் உருண்டன. பிறரிடம் இரத்தம் கொதித்தது. ஒருவர் பின் ஒருவராய் முன்வந்து, வன்னியை அணைத்தனர். ஒன்றன் பின் ஒன்றாய் தலைகளும் சிதறியது. அரசனுக்குச் செய்தி எட்டியது. அஜித் சிங்கின் மனமும் இளகியது.ஆனால் அதற்குள் அங்கு 363 பிஷ்ணாய்கள் பலியாயினர். இச்சோகக் காட்சியை கண்ட அரசன், வன்னிமரக் காடுகளுக்கு உயிர்பிச்சை அளித்தான். தாமிரப்பட்டயத்தில், பிஷ்ணாய்களின் கிராமங்களில் இனி எந்த ஒரு மரமோ அல்லது பிராணியோ வெட்டப்பட மாட்டாது என்று எழுதிக்கொடுத்தார். இச்சம்பவம் நடந்த கிராமத்திற்கு’கெஜாரி’ (வன்னி எனப் பொருள்படும்) என்ற பெயரும் ஏற்பட்டது. தமிழகத்தில் வன்னிமரத்தடியில் பிள்ளையாரை பிரதிஷ்டை செய்து வழிபடுவதுண்டு.