Monthly Archives: January 2017

seetha fruit

இராம் சீதா

இராம் சீதா

ENGLISH NAME :  Bullocks Heart

TAMIL NAME :  இராம் சீதா

BOTANICAL NAMEAnnona reticulata L

விஞ்ஞானப் பெயர்:  அன்னோனா  ரெடிகுலேட்டா (Annona reticulata L.)

தாவரக் குடும்பம் :  அன்னோனேசி.

இராம் சீதா  ஒரு  வளர்ப்பு  மரம் .பழம். தரும்  மரம்.  இது  ஒரு  சிறு  மரம்.    ஈரச் சூழ்நிலையில்  வளரும். நீண்ட  கிளைகளுடன்,  சுமாராக  அடர்ந்த   மரமாக  இருக்கும். 6-8 மீட்டர்  உயரம்  வளரும்.
seetha fruit

கிளைகளில்   பூக்கள்  உருவாகி, பின்னர்  காய்கள் தோன்றிவிடும்.  முதிர்ந்த பழம்.    7.5-12.5 செ.மீ.  விட்டமும்  இருதய வடிவத்துடனும்  இருக்கும். ஒரு  பழம். அரை  கிலோ  எடை  வரை   இருக்கும். பழுத்த  பழம் சிவப்பு  நிறமாக  இருக்கும். பழச்சதை  வெண்மை  நிறமுடையது. பழச்  சதையில்  பல  விதைகள்  இருக்கும்.

பயிர் முறை

பல்வேறு  பயன்கள்  கொண்ட  ராம்  சீதாப்   பழ  மரம்,   ஈரச்  சூழ்நிலையில்  வளரக்கூடியதாகும்.  கிராமத்திலும், நகரத்திலும்  வீட்டு மரமாகவும்  பயிரிடலாம். பெரிய  மரமாக  வளர்வதில்லை  எனவே  சிறு பகுதிகளில்  கூடப்  பயிரிட்டு, சுவை  மிக்க பழங்களைப்  பெறலாம். நட்டக்கன்றுகள்  4-7 வருடங்களில்  காய்க்கும்.  மரத்திற்கு 50 என  சராசரியாகக்  கிடைக்கும்.

images

 

1.Musukkattai maram

முசுக்கட்டை

முசுக்கட்டை

ENGLISH NAME : Mulberry Tree

TAMIL NAME :  கம்பளிப் பூச்செடி

BOTANICAL NAMEM  alba var.multicaulis   / M  alba var.atropurpurea

முசுக்கட்டையில் இருவகைகள் உள்ளன பட்டுப் பூச்சி வளர்பதற்காகக் குத்தாக வளர்ந்து அதிகமாகத் தழை கொடுக்கும் வகையை மோரஸ் ஆல்பா வெரைடி மல்டிகாலிஸ் (M  alba var.multicaulis) என்பர். இந்த வகைச் செடிகளே தோட்டங்களில் பட்டுப் பூச்சி வளர்க்க, பயிரிடப்படுகிறது. மற்றொரு வகையான  மோரஸ் ஆல்பா வெரைடி அட்ரோபர்பூரியா (M  alba var.atropurpurea) என்பதை கனிகளுக்கான மரமாக வளர்க்கின்றனர். எனினும் இரண்டும் மரவகையைச் சேர்ந்தவையே. பட்டுப்புழு வளர்க்கும் வகையையே இங்கு விவரிக்கப்படுகிறது.

1.Musukkattai maram

முசுக்கட்டை ஒரு சிறு மரம். 7.5-9.0 மீட்டர் உயரம் வளருகிறது. மரமாக வளர்த்தால் செங்குத்தாக வளர்ந்து, சிறிது உயரத்திலேயே கிளைகளை உருவாக்கி படர்ந்த தழையமைப்புடன் இருக்கும். சிறு செடிகளில் பட்டை மிருதுவாக இருக்கும். முற்றிய மரங்களில் பட்டை கரடுமுரடாக மாறிவிடும். 30 செ.மீ பருமனுடைய மரங்களை வெட்டினாலும் தழைத்து விடும். மார்ச்- ஏப்ரல் மாதங்களில் பூக்கும். ஆண்பூக்களும், பெண்பூக்களும் தனித்தனி கொப்புகளில் இருக்கும். சமயத்தில் ஒரே கிளையிலும் இருக்கலாம். ஏப்ரல்-ஜூன் மாதங்களில் பெண் பூங்கொத்துக்கள் கனிக் கொத்துகளாக மாறும். 5 செ.மீ  நீள கனிக் கொத்துக்கள் வெண்மையாகவோ அல்லது சிவப்புச் சாயையுள்ள ஊதா நிறமாகவோ இருக்கும்.கம்புளிப் புழு வடிவத்தில் அதே அளவில் இருக்கும் (அதனால் சில இடங்களில் கம்பளிப் பூச்செடி எனக் கூறுவர்). கனிகளுக்குத் தொலி கிடையாது.தொட்டு அழுத்தினாலே பழஇரசம் கசிந்து விடும்.

இலை

பசுமாடுகளுக்கு காலையும், மாலையும் ஒரு சேர் அளவில் முசுக்கட்டைத் தழையைத் தீவனமளித்தால், பால் அளவு அதிகரிக்கும். தினமும் 6 கிலோ அளவில் தீவனமாகத் தழையைக் கொடுக்கலாம்.கோழித்தீவனத்திலும் சிறிது உலர்த்திய தழையை 6% அளவில் கலந்திடலாம்.  பட்டுப் புழுக்கள் பிற இலைகளை எல்லாம்விட, முசுக்கட்டை இலையை விரும்பி உண்பதற்கு, இந்த இலையிலுள்ள மூன்று வகை சத்துப் பொருட்கள் காரணமாகும்.

2.Musukkattai maram

  1. கவர்ச்சி: இலைகளில் சிட்ரல் (Citral) வினலைல் அசிடேட் (Vinalyacetate), லினலால் (Linalol), டெர்பினைல் அசிடேட் (Terpenylacetate) மற்றும் ஹெக்சினால் (Hexenol) என்ற பொருட்கள் இலைக்குக் கவர்ச்சித் தன்மையைக் கொடுக்கின்றன.இதனால் புழுக்கள் கவரப்பட்டு உண்கின்றன.
  2. கடித்துத் தின்றிடத் தூண்டும் தன்மை : இலைகளில் 0.02% அளவிலுள்ள பீடா – சீட்டோஸ்டிரால் (B -Sitosteral) மற்றும் சில பொருட்களும் கடித்துத் தின்றிடத் தூண்டுபவை குறிப்பாக, இலைகளில் பீடா – சீட்டோஸ்டிரால் எவ்வளவு உள்ளதோ அவ்வளவுக்கு, புழுக்கள் தின்று, கொழுத்து விடும்.
  3. எளிதில் விழுங்கச் செய்யும் தன்மை உடையது.

இவ்விதம் அருமையான சத்துக்களுடைய முசுக்கட்டை இலையை மனித உணவாகவும் சமைத்து உண்ணலாம்.

மரம்

பளுதாங்கும் திறன், வளைந்து கொடுக்கும் திறன் ஆகியவற்றில் தேக்கு மரத்தைவிட மேலானது.

பயிர் முறை

விதையை நாற்று விட்டு, கன்றுகளாக நடலாம். முளை ஒட்டு, கிளை ஒட்டு, பதியன் ஆகியவை மூலம் சிறந்த இரகங்களையும் வளர்க்கலாம். இவை அனைத்திலும், கிளைக் குச்சிகளை நடுவதே எளிய முறையாகும்.

1.Mavilanku

மாவிலங்கு

ENGLISH NAME ; THE SACRED BARNA

TAMIL NAME; மாவிலங்கு

SCIENTIFIC NAME : Crateva Magna

அழகு மரமாகப் பூத்துக் குலுங்கும். காடுகளிலும், சமவெளிகளிலும் சிறிது ஈரச்செழிப்புள்ள நிழல் விழும் பகுதிகளிலும் வளருகிறது தமிழ்நாட்டில், வறண்ட பகுதிகளிலும் உள்ளது. மாவிலங்கு 12-14  மீட்டர் உயரம் வளரும் மரமாகும். மேற்பகுதியில் நன்கு கிளைத்து அடர்ந்திருக்கும். பட்டை சாம்பல் நிறமுடையது.இலைகள் மும்மூன்றாக, நடுவில் உள்ள இலை சற்று நீளமாக இருக்கும். பிப்ரவரி மாதத்தில் இலையுதிர்த்து, பின்னர் கிளை நுனிகளில்  5 செ.மீ அளவுள்ள பூங்கொத்துக்கள் உருவாகும். இவற்றில் பழுப் பு கலந்த  வெண்மைநிறப் பூக்கள் அடர்ந்திருக்கும். இதுசமயம், தொலைவிலிருந்து பார்க்கும்பொழுது, மரம் முழுவதும் வெண்பனி போர்த்தியதுபோல் காணப்படும்.

1.Mavilanku

பூக்கள்

பூக்களில் தேன்  சத்து உள்ளது. மார்ச் மாதத்தில் தேனீக்களின் தேவையைப் பூர்த்தி செய்யும்.

மரம்

மரத்தை வெட்டியதும் மஞ்சள் நிறமாக இருக்கும் . பின்னர் கருமை நிறம் பெற்றுவிடும். சுமாரான கடினமுடையது. கனமில்லாதது. தீக்குச்சிகள் தயாரிக்கலாம்.

இதரப் பயன்கள்

பூக்கும் சமயம் மிகவும் அழகாக இருப்பதால் இதனை அழகு மரமாக வளர்க்கலாம். பிற மரங்களுடன் நட்டால், நன்கு அழகாக இருக்கும்.

2.Mavilanku

மருத்துவப் பயன்கள்

பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த ஆயுர்வேத மருத்துவத் தந்தை சுஸ்ரூதர், மாவிலங்கின் மருத்துவ தன்மையைக் கண்டறிந்துள்ளார். ஆயுர்வேத மருத்துவத்தில் ‘வருணா’ என்ற பெயரில் மாவிலங்கு இடம் பெற்றுள்ளது.

இலை

பல்வேறு அருமையான பண்புகளுடைய இலைக்காக, மருத்துவமனைகளில் ஒன்றிரண்டு மரங்களை வளர்ப்பது அவசியம்.

பயிர் முறை

மாவிலங்கு மரம் தமிழகத்தில் எங்குமே வளரக் கூடிய மரமாகும். இயற்கையில், பறவைகளே  பழங்களை உண்டு, விதையைச் சிதறி விடுகின்றன. அதன் பயனாய் பிற இடங்களில் மாவிலங்கு பரவ வும், மற்றும் வேர்ச் செடிகளும் வளர்ந்து, மரத்தை வெட்டிய இடங்களில், புது மரங்களாக வளர்ந்து விடும். பழுத்த கனிகளிலிருந்து விதையை எடுத்து, நன்கு கழுவி, உலர்த்தி சேகரித்து வைத்துக் கொள்ளலாம். சுமார் 10 மாதங்கள் வரை, முளைப்பு  திறன் இருக்கும்.

1.maruthu maram

மருதமரம்

மருதமரம்

ENGLISH NAME :  Arjun

TAMIL NAME : மருதமரம்

BOTANICAL NAME :  Terminalia Arjuna

ஓங்கி உயர்ந்து வளரக்கூடியது, மருதமரம்.கடுங்களர் நிலங்களிலும் வளரும். தமிழ்நாட்டில் பல மருது இனங்கள் இருப்பதால், இதனை வெள்ளை மருது அல்லது வெண்மருது என்பர். தமிழ்நாட்டில் கடற்கரையிலிருந்து  1000-1400  மீட்டர் உயரப் பகுதி வரையில், ஆற்றோர  மரமாக வளருகிறது. சாதாரணமாக ஏழு மீட்டர்  சுற்றளவுடன் 30 மீட்டர்  உயரம்  வளரக்  கூடியது. நல்ல  சூழ்நிலையில்  10  மீட்டர்   சுற்றளவுடன்  60 மீட்டர்  உயரத்தையும்  எட்டிடும். மழைக்காலம் முடிந்ததும் இலைகள் சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறமடைந்து உதிரும்.

1.maruthu maram

ஏப்ரல்-ஜூலை  மாதங்களில், இலைச்  சந்துகளிலிருந்து, (நுனிப்பகுதியில்)    10  செ.மீ  நீளமுள்ள பூங்கதிர்களில்  சிறு  பூக்கள்  உருவாகும். நான்கு மில்லிமீட்டர் அளவேயுள்ள  இப்பூக்கள்  நன்கு  தெரியாது. ஜூன் மாதத்திற்கு  மேல்  நெற்றுக்கள் உருவாகத் துவங்கும். ஐந்து இறக்கைகளுடைய, ஐங்கோண  நெற்றுக்கள்  4.5-6.0 x 2-3  செ.மீ  அளவுடன்  மரத்திலேயே  நீண்ட  நாட்கள்  நிலத்து, சிறுகச்  சிறுக  உதிர்ந்து கொண்டிருக்கும். மரத்தினடியில்  வேர்ச்  செடிகளும்  உருவாகும்.

மரம்

முன் காலத்தில் கோவில் தேர்கள் செய்ய, மருத  மரத்தைப் பயன்படுத்தியுள்ளனர்.

பயன்கள்

களர் நிலங்களில் மருதமரத்தை வளர்த்தால்,  களரின் கடுமை குறைந்துவிடும். முன் காலத்தில் காடுகளில் மருதமர வளர்ச்சியைக் கொண்டு, நீர் ஊற்று இருப்பதை கண்டறிந்தனர். ஓங்கி வளர்ந்த மருதமரத்தின் அருகே, ஆழத்தில் நீரூற்று இருக்கும் என நம்பப்படுகிறது.

2.maruthu maram

பயிர் முறை

மருத மரம் நீர்ச் செழிப்புள்ள பகுதிகளில் வளரும் மரமாகும். எனவே மருத மரத்தை, கால்வாய்க் கரைகள், ஆற்றோரங்கள்,  கண்மாய் கரைகள் எனப் பார்த்து நடவேண்டும். நீர் கிடைத்தால், அழல் நிலத்திலும் கூட வளர்ந்து மண்ணை வளப்படுத்திடும்.நிறைய கிளைகள் இருப்பதால் தூசிக்காற்றிலுள்ள தூசியையும் வடிகட்டிக் கொடுத்திடும்.தொழிற்சாலை வளாகங்களிலும், நீர்பாய்ச்சி ஓங்கி உயரமாக வளரச் செய்து, புகை வடிகட்டியாகவும் பயன்படுத்தலாம். மருதமரத்தைப் பயிரிட, நேரடியாக விதைக்கலாம். நாற்று விட்டு, கன்றுகளை நடலாம்.

நாற்றுக்குச்சிகள் தயாரித்து நடலாம்.கிளைக்குச்சிகளை வெட்டி, செடிவளர்க்கும் குளிர் அறைகளில் (mist chamber) துளிர்விடச் செய்து நடலாம். நட்ட கன்றுகளுக்கு அடிக்கடி கொத்திக் கொடுத்து, கோடையில் நீர் பாய்ச்சினால், துரிதமாக வளரும்.செடிகள் சாய்ந்து வளரும். ஒரு கழியை ஊன்றி நேராக வளரச் செய்ய வேண்டும், மற்றும் கிடைமட்டத்தில் வளரும் கிளைகளை வெட்டி, செங்குத்தாக வளரச் செய்ய வேண்டும்.

1.maraa maram

மரா மரம்

மரா மரம்

ENGLISH NAMESonneratia

TAMIL NAME:  மரா மரம்

BOTANICAL NAMESonneratia ApetalaBuchham

கடல், நிலத்தை அரித்துக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில், கடலை மேடிட்டு நிலமாக்கும் அரிய பணியை மராமரம் செய்கிறது.

மராமரம் கடலும் நிலமும் சேரும் இடங்களில் சதுப்பு நிலங்களில் வளரும் மரமாகும். தமிழ்நாட்டில் பிச்சாவரத்தில் உள்ளது.

2.maraa maram

மராமரம்  8-10 மீட்டர் அளவில் உயர்ந்து வளரக் கூடியது. மரத்தைச் சுற்றிலும், மூச்சுவிடுவதற்காக வேர்களிலிருந்து, கூர்மையாகவும் செங்குத்தாகவும் உள்ள கார்க்குப் போன்ற குத்துவேர்களை (pneumatophores)  உருவாக்கிக் கொண்டு வாழும் இயல்புடையது. ஜூன் மாதத்திற்கு மேல், கனிகள் உருவாகும்.   2   செ.மீ அளவில் உருண்டையாக இருக்கும். புற இதழ்கள் கிரீடம் வைத்தது போன்று இணைந்து, கனிகள் மிதப்பதற்கு உதவிடும். விதைகள் பின்னர் மிதந்து சென்று, இதரச்  செடிகளால் தடுத்து நிறுத்தும் இடங்களில் முளைத்து  வளர்ந்து விடும்.

1.maraa maram

கடலைத் தூர்த்துக் கழனியாக்கும் திறனுடைய மராமரம், நிலத்தைக் காக்க மிகவும் இன்றியமையாத மரமாகும். கடல் அரிப்பால் பல இடங்களில், நிலம் பாதிக்கப்பட்டுவரும் நிலையில், இதனைப் பல்வேறு இடங்களிலும் பயிரிடுவது அவசியமாகும்.

3.makizha maram

மகிழ மரம்

மகிழ மரம்

ENGLISH NAME : Bullet Wood

BOTANICAL NAME :  Mimusops Elangi

நறுமணப் பூக்கள், பந்து போன்ற தழையமைப்பு, பசுமை மாறா நிலை ஆகியவை மூலம் மகிழ்விக்கும் மரமே, மகிழ மரம். மகிழ மரம் ஏப்ரல் மாதத்திலிருந்து டிசம்பர் மாதம் வரை பூக்கும், எனினும் ஏப்ரலில் அதிகமாகப் பூக்களைக் காணலாம்.

மே மாதத்தில் காய்களும், பழங்களும் உருவாகும். ஆகஸ்ட் – செப்டம்பரில் அதிகமான பழங்கள் இருக்கும்.

பூக்களில் அதிகம், தேன் இருக்கும்.. ஏப்ரல்-மே  மாதங்களில் தேனீக்கள் மொய்த்துக் கொண்டிருக்கும்.

1.makizha maram

பயன்கள்

நறுமணம், நல்ல நிழல், அடர்ந்த பந்து போன்ற தழையமைப்பு ,ஆகியவற்றையுடைய அழகு மரமாக எங்கும் காணப்படும்,

2.makizha maram

பயிர் முறை

மகிழ மரம், எங்கும் வளரக் கூடியது. நகரங்களில் வீட்டு மரமாக வளர்க்க ஏற்றது. அழகு மரமாக இருப்பதுடன், தூசிக் காற்றையும் நன்கு வடிகட்டும். நல்லதொரு குளிர்ச் சூழ்நிலையையும் தோற்றுவிக்கும்.பெரிய கட்டிட வளாகங்களில், வரிசையில் நட்டால் மிகவும் அழகாக இருக்கும்.

mango-tree

மா மரம்

 ENGLISH NAME :  MANGO TREE

BOTANICAL NAME : MANGIFERA INDICA

TAMINL NAME : மா மரம்

தமிழரின் முக்கனிகளில் ஒன்று மாம்பழம். காயாக இருக்கும் பொழுது வைட்டமின் ‘சி’ யும், கனியாகும் பொழுது கரோடினும் நிறைந்தது.

மொத்த உலக உற்பத்தியில் இந்தியாவில் 52.9 % அளவில் மாம்பழங்கள் உற்பத்தியாகிறது.

1.mango tree

மாமரம் நன்கு அடர்ந்த தழையமைப்புடைய பசுமைமாறா மரமாகும். கொட்டைக் கன்றுகளின் மரங்கள், நன்கு ஓங்கி உயர்ந்து, பக்கவாட்டிலும் அடர்ந்து வளரும். ஒட்டுக் கன்றுகள் அதிக உயரமின்றி அடர்ந்து படரும் கிளைகளுடன், தழையமைப்பு அரைவட்ட வடிவத்தில் அல்லது முக்கால் கோள வடிவிலிருக்கும். பொதுவாக டிசம்பர் மாதத்தில் மாமரம் பூக்கிறது. ஒரு பூங்கதிரில் சராசரியாக ஆயிரம் பூக்கள் இருக்கும். கடற்கரைப் பகுதிகளில், குற்றாலம் போன்ற இடங்களிலும் தட்பவெப்ப சூழ்நிலை காரணமாக,காலமில்லாக் காலங்களில் (Off Season) பூத்துக் காய்ப்பதுண்டு.

பல்வேறு பழ இரகங்கள் அதன் பயன்கள்

வீடுகளில் வளர்க்கத்தக்க அருமையான பழவகைகள் :

ஜிஹாங்கீர், இமாயுதீன் (இமமாம் பசந்த்), ஆலம்பூர், பனிஷான் (பங்கனப்பள்ளி/சப்பட்டை).

mango-tree

தோட்டங்களில் வாணிப நோக்குடன் வளர்க்கக் கூடிய இரகங்கள்:

ஆல்பன்ஸோ, பனிஷான், கலப்பாடு, ருமானி,நீலம், பங்களுரா.

பழச்சாறு பெறுவதற்கும் பழமாக உபயோகிப்பதற்கும் ஏற்ற இரகங்கள்:

பீதர் (நடுசாலை/சின்ன ஸ்வர்ன ரேகா), குததாத்

பழச்சாறுக்கு மட்டும் ஏற்ற  இரகங்கள்:

செருகுறுசம்

ஊறுகாய் போடுவதற்கு ஏற்ற இரகங்கள்:

அச்சாற்பச நீ, கட்டிமார்

பூக்கள்

பூவை உலர்த்தி பொடித்து, புகையிட்டால்,கொசுக்கள் ஓடிவிடும்.

Flower

மாம்பிஞ்சு

‘மாதா ஊட்டாத அன்னத்தை மாங்காய் ஊட்டிவிடும் என்பது

ஊறுகாய் மாங்காய்கள் பற்றிய பழமொழி.

ஊறுகாய் மாங்காய்களில் சிட்ரிக்,மாலிக்,ஆக்ஷன் ஆக்ஸாலிக், சக்சீனிக் மற்றும் இரு அமிலங்கள் உள்ளன. இவற்றில் சிட்ரிக் அமிலமே பிரதான அளவில் உள்ளது.

மரம்

மரத்தை நன்கு உரிக்கலாம். உரித்து, ஒட்டுப் பலகை செய்திட பல இடங்களிலும் உபயோகிக்கப்படுகிறது. மரப்பீப்பாய்கள் செய்யவும் ஏற்றது.

Mango-Tree-

பயிர் முறை

தமிழகத்தில் எங்குமே மாமரத்தைப் பயிரிடலாம். தர்மபுரி மாவட்டத்தில் இயற்கைச் சூழ்நிலை நன்கு இருப்பதால், செவ்வல் மற்றும் பாறைகள் உள்ள இடங்களில் வளருகிறது.

1

செவ்விலவு

ENGLISH NAME :  RED SILK COTTON TREE

SCIENTIFIC NAME ;  Bombax Ceiba.D.Syn: Salamalia Malabarica) 

பம்பாக்ஸ் என்ற முதற்பெயர் கிரேக்க மொழிச் சொல்லிலிருந்து ஏற்பட்டது. சில்க் போன்ற பஞ்சின் தன்மையை இச்சொல் குறிக்கிறது.

பொது விவரம்

செவ்விலவு, நம் நாடெங்கும் காணப்படும் மரம். இராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றில் இடம் பெற்றுள்ளது. கடல் மட்டத்திலிருந்து 800 மீட்டர் உயரம் வரை, சமவெளி, புல் தரைகள் மற்றும் குன்றுகளிலும் வளருகிறது. இலையுதிர்க் காடுகளிலும் காணப்படுகிறது. இங்கெல்லாம் பிரமாண்டமான மரமாக வளர்ந்திடும்.

1    2114313519_4c9fb32b0b

மார்ச்- ஏப்ரலில் பூக்கும். இப்பூக்கள் குங்குமச் சிவப்பு நிறத்தில் பெரிய பூக்களாக கிளைகளின் நுனிகளில் உருவாகும். பச்சை நிற புற இதழ் மூடிய மொட்டுக்கள் தோன்றியவுடன் பறவைகள் வந்துவிடும்.காடுகளில், பல்வேறு வண்ணப் பறவைகள், செந்நிறச் செவ்விலவுப் பூக்களின் நடுவே அமர்ந்து  துள்ளிப் பறக்கும் காட்சி மிகவும் அழகானது. உலர்ந்த உதிரும் பூக்களை நாடி, காடுகளில் மான்களும் வந்துவிடும். ஏப்ரல் மாதத்திற்கு மேல் காய்கள் உருவாகும். தமிழ்நாட்டில் மார்ச் மாதத்தில் தேனீக்களும் செவ்விலவுப் பூக்களை தேடி வரும்.

பஞ்சு

நாட்டு இலவைப் போன்றே, செவ்விலவு நெற்றுக்களிலும் பஞ்சு இருக்கும்.

images       Bombax malabaricum, Red Silk-cotton Tree

பயிர் முறை

இதனை மூன்று வழிகளில் வளர்க்கலாம். நேரடியாக விதைக்கலாம். நாற்று விட்டு கன்றுகளை நடலாம்.நாற்றுக்குச்சிகளையும் நடலாம். நட்ட 5-6 வருடங்களில் பலன் கொடுக்கத் துவங்கும். தமிழகத்தில் எங்கும் பயிரிடத் தகுந்த மரமாகும். இம்மரம் கிராமத்திலும், சாலை ஓரங்களிலும் பயிரிட ஏற்றது. நகரங்களிலும் பெரிய சாலைகளிலும் மற்றும் பெரிய கட்டிட வளாகங்களிலும் நட்டு காற்றை சுத்தப்படுத்தலாம்.

arasu 2

அரச மரம்

ENGLISH NAME :  FICUS RILIGIOSAL

TAMIL NAME :   அரச மரம்

விஞ்ஞானப் பெயர்.,

ஃபைகஸ் ரிலிஜியோசா (FICUS RILIGIOSA L ) அத்திக் குடும்பத்தைச் சார்ந்ததினால் ஃபைகஸ் என்ற முதற்பெயரும், சமய சம்பந்தமானது என்று குறிக்கும்  ரிலிஜியோசா பெயரும் இணைத்து வழங்கப்படுகிறது. வடஇந்தியாவில் இதனை பீப்பில் என்பர் .தாவரக் குடும்பம் மோரேசி.

arasu 2

பொது விவரம்

பறவைகள் உண்டு, அவற்றின் மூலம்  விதைகள் வெளியேறும் போது இம்மரம் பரவும் . ஜூலை, ஆகஸ்ட் முதல் செப்டம்பர் வரை பூக்கும், அதன்பின் பழங்கள் உருவாகி  உதிரும்.

தழை .,

இது கால்நடைகளுக்கு நல்லதொரு தீவனமாகும். யானைகள் இதனை விரும்பி உண்ணும்.

1

மரம் .,

இது சுமாரான வலிமையுடையது. காற்றிலுள்ள சல்பர் டைஆக்ஸைடு  என்ற நச்சுவாயுவை சுத்திகரிப்பதில் அரச மரம் மிகவும் திறனுடையது. எனவே, இந்த நச்சுவாயு அதிகமுள்ள இடங்களில் இதனை வளர்க்கலாம்.

arasu 3

பயிர் முறை .,

அரச மரத்தை, விதை மூலம்  நாற்றாகவும், நாற்றுக் குச்சிகளாகவும் நடலாம். பறவைகளுக்கு சிறந்த புகலிடமாக இருக்கும். நல்ல நிழல் தரும் மரம்.

2

அகத்தி

ENGLISH NAME :     SESBENIA GRANDIFLORA PERS

TAMIL NAME :      அகத்தி

விஞ்ஞானப் பெயர் : செஸ்பேனியா கிராண்டிபுளுரா

தாவரக் குடும்பம் : ஃபாபேசி செஸ்பேனியா என்ற முதற்பெயர் சித்தகத்தியின் “எகிப்தியப் பெயரிலிருந்து ஏற்பட்டுள்ளது.

பொது விவரம்

அகத்தியின் தாயகம் இந்தோனேஷியா, இருப்பினும் அகத்தி நாடெங்கும் பரவியுள்ளது.வேளாண்மையுடன் இணைந்து காற்றுத் தடுப்பு, நிழல் மற்றும் குளிர் சூழ்நிலை ஆகிய பயன்களுக்காகவும், வெற்றிலைக் கொடிக்கு செவிலித் தாயாகவும் பயன்படுகிறது. அகத்தி ஓங்கி, ஒடுங்கி, 6-9 மீட்டர் உயரம் வளரும்.துனி மரமாக இருந்தால், சிறிது பக்கவாட்டில் கிளைகளைக் பரப்பிக்கொண்டு, வளரும் எனினும் ஓங்கி உயர்ந்து வளரும் இயல்பே இதனிடம் உள்ளது.துரிதமாகவும் வளர்ந்திடும். அகத்தியில் இருவகைகள் உள்ளன. சாதாரணமாக, வெள்ளைப் பூக்களுடைய வகையே எங்கும் பரவியுள்ளது. இதனைத் தவிர சிவப்பு பூக்களுடைய வகையும் உள்ளது.இதனை செவ்வகத்தி என்பர். மகரந்த சேர்க்கை மூலம், இவ்விரு வகைகளும் இணைந்த ரகமும் உள்ளது. டிசம்பர்- ஜனவரி மாதங்களில் பூக்கும். செவ்வகத்தி சிறிது முன்பே செப்டம்பரிலிருந்து பூக்கத் துவங்கும். இப்பூக்களால் கவரப்பட்ட வௌவால்கள், பூக்களில் மகரந்த சேர்க்கை செய்கின்றன. இதன் பின்னர் 30-45 செ.மீ அளவில் நீண்ட காய்கள் உருவாகி, நெற்றுக்களாக முற்றிடும். நெற்றில் 15-20 விதைகள் இருக்கும்.

2

இலை

பசுமை இலைகள் மனிதனுக்குச் சிறந்த கீரையாகும். கீரை வகைகளிலே அதிக அளவில் புரதம் உடையது அகத்தி.

பூக்கள்

பூக்களில் தேன் சத்து உள்ளது. டிசம்பர்-ஜனவரி மாதங்களில் தேனீக்களின் தேவையைப் பூர்த்தி செய்திடும்.

விதை

உண்ணுவதற்கு ஏற்றதல்ல.

மரம்

மென்மையானது, மிகவும் மிருதுவானது. மரத்தில் 66.4% அளவில் ஹாலோ செல்லுலோசு இருப்பதால், காகிதம் தயாரிப்பதற்கு பயன்படும்.

1

பயிர்முறை

அகத்தி எங்குமே வளரக் கூடியது. செவ்வல், கரிசல் முதலிய மண் வகைகளிலும் வளர்ந்திடும். உவர் நிலத்திற்கும் ஏற்றது. நீர் தேங்கும் பகுதியிலும் அகத்தி வளர்ந்திடும். சிறு செடியாக வளர்ந்த நிலையில் நிலத்தில் 5 செ.மீ அளவிற்கு நீர் தேங்கிவிட்டால், வேர்களுக்கு காற்றை எடுத்துச் செல்லும் ஒரு தனித்த அமைப்பு (Aerenchyma) உறுவாகிவிடும். புகையைக் கக்கும் தொழிற்சாலைகள் உள்ள இடங்களில் வீடுகளில் மிகவும் அவசியமாக, அகத்தி பயிரிடல் வேண்டும். வீட்டைச் சுற்றிலும் உள்ள காலியிடங்களில் அகத்தியை வளர்த்தால், தூசியை வடிகட்டிடும்.